ஆரோக்கியம்குழந்தைகள் நலன்சமையல் குறிப்புதமிழகம்வாழ்க்கை முறை

மூன்றே முட்டையில் செமையான ப்ரேக்பாஸ்ட் , டின்னர் ரெடி..

அனைத்து பெண்களுக்கும் சமைப்பதை விட கஷ்டமான விஷயம் ஒன்று உள்ளது என்றால் என்ன சமைப்பது என்று யோசித்து யோசித்து கடைசி வரை தெரியாமல் முளைத்துக் கொண்டே இருப்பதே நாம் வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டாலும் எதையாவது செய்யுங்கள் என்று எளிதில் சொல்லிவிட்டு சென்று விடுகிறார்கள் ஆனால் சமைக்கும் பெண்களுக்கு மட்டுமே தெரியும் என்ன செய்வதென்று யோசிப்பது எவ்வளவு கஷ்டம் என்று… அதுவும் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டில் மட்டும் இருப்பவர்கள் இல்லை தினமும் வெளியில் வேலைக்கும் சென்று விட்டு விலையும் பார்ப்பவர்களாகவே உள்ளனர் இது மிகவும் கடினமான ஒன்று காலையில் எழுந்து அவர்கள் வேலைக்கு கிளம்புவதா இல்லை சமைப்பதால் அதுவும் என்ன சமைப்பது என்று யோசிப்பதா என்று நினைத்தாலே இது மிகக் கடினமான வேலைதான் .. அவ்வாறு யோசிக்கும் பெண்களுக்காக மிக எளிதான ஆரோக்கியம் நிறைந்த சூப்பரான ஒரு பிரேக் பாஸ்ட் அல்லது டின்னர் எவ்வாறு சமைப்பது என்று பின்வருமாறு பார்க்கலாம் இந்த உணவு உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாகவும் குழந்தைகள் விரும்பி ரசித்து உண்ணும் உணவாகவும் அதேசமயம் பெரியவர்களும் ஆர்வத்துடன் உண்ணும் உணவாக உங்களுக்கு இருக்கும்…

தேவையான பொருட்கள்

முட்டை – 3

பெரிய வெங்காயம் -2

குடைமிளகாய் -1

தக்காளி – 1

மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்

சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

அரைத்த வர மிளகாய் – 2

பிரெட் – 4

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள் அதில் நாம் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்க்கவும் மேலும் அதில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய குடைமிளகாய் ஒன்று அதேபோல் சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளி ஒன்று மேலும் நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று ஆகியவற்றை சேர்த்து கலக்கிக் கொள்ளவும் பின்பு அதில் மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் அரை டீஸ்பூன் சீரகத்தூள் அரை டீஸ்பூன் மேலும் நாம் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்த வர மிளகாய் இரண்டு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும் மேலும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

கலக்கிய பின்பு நாம் எடுத்து வைத்த இரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும் இதை அனைத்தையும் தயார் செய்து விட்டு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்க்கவும் பின்பு அதில் நாம் தயார் செய்து வைத்த முட்டை கலவையை ஊற்ற வேண்டும். ஊற்றிய பின்பு நாம் சிறு துண்டுகளாக வெட்டி வைத்த பிரட் துண்டுகளை முட்டை கலவையின் மேல் போட்டு வேக வைக்க வேண்டும் அடி பாகம் வெந்தவுடன் மெதுவாக முட்டைக் கலவையை திருப்பி போட்டு மறுபிறமும் நன்றாக வேக விடவும் இரு பக்கமும் வெந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு மெதுவாக அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும் அவ்வளவுதான் சூடான சுவையான முட்டை பிரட் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி ரெடி இதனை நீங்கள் பிரேக்ஃபாஸ்டாகவும் சாப்பிடலாம் அல்லது இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம் இந்த உணவு மிக எளிதானது மட்டுமல்ல .. ஆரோக்கியம் நிறைந்த குழந்தைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *