பார்டி மூடில் சன்னி லியோன்..! ரசிகர்களுக்கு அழைப்பு…
இளைஞர்களை சுண்டி இழுக்கும் பாலிவுட் நடிகையான சன்னி லியோனை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 50 மில்லியனை தொட்டுள்ளது.
கனடா நாட்டில் நீலப்பட நடிகையான (பார்ன் ஸ்டார்) சன்னி லியோன் இப்போது பாலிவுட்டில் கொடி கட்டி பறக்கிறார். அது தவிர தமிழ், தெலுங்கு, மலையாள படங்களிலும் தனது ஹாட்டான நடிப்பில் அசத்தி வருகிறார்.
மேலும் அவர் சினிமாவில் நடிப்பதோடு சமூக வலைத்தளங்களிலும் செம்ம ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இந்திய சினிமாவில் பிரியங்கா சோப்ரா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் தீபிகா படுகோனே, ஆகியோர் இன்ஸ்டாவில் 50 மில்லியன் பின்தொடர்கிறவர்களை தாண்டியவர்கள் , அந்த வரிசையில் சன்னி லியோனும் இணைந்திருக்கிறார்.
அவரை பின்தொடரும் ஃபாலோயர்கள் தற்போது 50 மில்லியனாக அதிகரித்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியில் தத்தளித்த நடிகை சன்னிலியோன் குதூகலமாக டான்ஸ் ஆடிய படியே பார்டி பண்ணலாமா? எனத் தனது ரசிகர்களிடம் கேட்டு வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க : காதல் வளர்த்த… மன்மதன் படம்