சண்டே ஸ்பெஷல்.. சூப் வெரைட்டி..!!
எலும்பு சூப்பு
சூப்பு உடலுக்கு வலிமையை கொடுப்பதோடு, எலும்புக்கு சக்தி தர கூடியது. எலும்பு சூப் மாதத்திற்கு இரண்டு முறையாவது வைத்து கொடுக்க வேண்டும்.
தேவையான பொருட்கள் : நெஞ்செலும்பு அரைக்கிலோ, சின்ன வெங்காயம் தோலுரித்து 50 கிராம், தக்காளி நறுக்கியது 2, மிளகு ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு.
தாளிக்க : பட்டை 2 துண்டு, கிராம்பு ஏலக்காய் 2, நெய் ஒரு ஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு.
செய்முறை : நெஞ்செலும்பு நன்றாக கழுவி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியை, குக்கரில் எலும்பு, தட்டிய மிளகு, சீரகம், மஞ்சள் தூள், நெய், உப்பு, தண்ணீர்,தாளிக்க பொருட்களை தாளித்து கொட்டவும், இவற்றை சேர்த்து 6 விசில் விட்டு இறக்கவும். சூடான சுவையான எலும்பு சூப் தயார்.
கோழி சூப் செய்து கொடுப்பதால் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிக சத்து கிடைக்கும். புரோட்டீன் சத்து இதில் மிகுந்துள்ளது. இதை வாரம் ஒரு முறையாவது இந்த சூப் குடிப்பது உடம்புக்கு தெம்பு கிடைக்கும்.
கோழி சூப்
தேவையான பொருட்கள் : கோழி அரை கிலோ, பெரிய வெங்காயம் 2 நறுக்கியது, உப்பு தேவைக்கேற்ப, இஞ்சி, பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன், மிளகுத் தூள் 2 தேக்கரண்டி, சோம்பு சிறிது, தக்காளி 2, மஞ்சள் தூள் தேவையான அளவு.
செய்முறை : அரை கிலோ கோழி கறியை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கழுவி வைத்து விடவும். இதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட், பெரிய வெங்காயம் அல்லது சிறிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, மிளகுத் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, அனைத்தையும் கலக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு, பிரஷர் குக்கரில் 4 விசில் விட்டு இறக்கவும். சில நிமிடங்கள் கழித்து இறக்கியதும் சுவையான கோழி சூப் தயாராகிவிடும்.
இதை சளி பிடிக்கும் போது இந்த சூப் குடிப்பதால் உடனடியாக சளி வெளியேறும் இதில் மிளகுத்தூள் தூக்கலாக சேர்த்துக் கொள்ள வேண்டும்
மட்டன் சூப்
தேவையான பொருட்கள் : மட்டன் கால் கிலோ, சிறிய வெங்காயம் 50 கிராம் நறுக்கியது, தக்காளி ஒன்று, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை.
செய்முறை : மட்டனை கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள், வெங்காயம்,தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகுத்தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, அனைத்தையும் சேர்த்து குக்கரில் 6 விசில் விட்டு, இறக்க சுவையான மட்டன் சூப் தயார்.
இந்த சூப் வகைகளை வாரத்திற்கு ஒரு முறை செய்து குடிப்பதால் சளி தொந்தரவு இருக்காது. உடலுக்குத் தேவையான பலம் கிடைக்கும். அசைவப் பிரியர்கள் இந்த சூப்பை அருந்தலாம். குழம்பு பொரித்து சாப்பிடுவதை விட சூப்பாக வைத்து குடிப்பதால் முழுச் சத்தும் கிடைக்கும்.