சமையல் குறிப்புவாழ்க்கை முறை

சண்டே ஸ்பெஷல்.. மீன் வெரைட்டி..!!

மீன் உடலுக்கு மிகவும் நல்லது. வெயில் காலங்களில் மீன் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். மீன் குளிர்ச்சி என்பதால் வெயில் காலங்களில் இது மிகவும் ஏற்றது. கண்ணிற்கு மிகவும் நல்லது. இதை குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்க வேண்டும்.

மீன் குழம்பு

தேவையான பொருட்கள் : மீன் அரை கிலோ, உப்பு போட்டு சுத்தமாக கழுவி வைத்து எடுக்கவும், வெங்காயம் உரித்தது 5, தக்காளி நறுக்கியது 1, புளி கரைசல் அரை கப், மிளகாய் தூள், மல்லி தூள் தலா ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் கால் ஸ்பூன், உப்பு தேவையான அளவு,

தாளிக்க : கடுகு, சீரகம், வெந்தயம், வர மிளகாய், கறிவேப்பிலை தேவையான அளவு, எண்ணெய், கொத்த மல்லித் தழை.

செய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சோம்பு, வெந்தயம் தாளித்து, வெங்காயம், தக்காளி வதங்கியதும், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சிறிது சேர்த்து, வதக்க வேண்டும். மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து,புளிக் கரைசல் விட்டு கொதிக்க விட்டு மீனை குழம்பில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். சுவையான மீன் குழம்பு தயார்.

மீன் ரோஸ்ட்

தேவையான பொருட்கள் : மீன் துண்டுகள் கழுவியது 10, இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் 2 ஸ்பூன், கேசரி பவுடர் சிறிது, உப்பு தேவையான அளவு. எலுமிச்சை சாறு சிறிதளவு, எண்ணை பொரிக்க தேவையான அளவு.

செய்முறை : மீன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்து, அதில் இஞ்சி, பூண்டு அரைத்து சேர்க்கவும். மிளகாய்த் தூள், எலுமிச்சை பழ சாறு, கேசரி பவுடர் சிறிது, உப்பு கலந்து, அனைத்தையும் கலந்து சிறிது நேரம் காய வைத்து எடுக்கவும். இந்த கலவையை மீன் துண்டுகளை ஊற வைத்து, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க மீன் ரோஸ்ட் தயார். அல்லது தோசைக் கல்லில் போட்டு நன்றாக எண்ணெய் ஊற்றி, நாலு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *