சமையல் குறிப்புவாழ்க்கை முறை

சண்டே ஸ்பெஷல் பிரியாணி

மச்சான் பிரியாணினு வீட்டுக்கு கூப்பிட பீஸ் போட்டு இருக்காங்களாடா?

பக்கத்து வீட்டிலேயே இருக்கியே பிரியாணி பண்ணி இருக்காங்களா பாவமேனு கூப்பிட்டேன். நல்லா இருக்கு வாடா.

மச்சான் பீஸ் எங்கடா?

இதோ இருக்கேடா பிரெட் பீஸு. சென்னையில இருக்கிற ஒவ்வொரு இடங்களை எங்கேருந்து இன்னிக்கு பீஸ் வாங்கறது. உங்க வீட்ல சாம்பார் சாதம்தான அதுக்கு பதிலா இந்த பிரியாணியை சாப்பிடலாம்ல. ரொம்ப பேசினா இதுவும் கிடைக்காது_ .

வெஜ் பிரியாணி

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி-1.5 ஆழாக்கு (300கிராம்)
உப்பு-2 டீஸ்பூன்
ரிஃபண்டு எண்ணெய்-3 தே.கரண்டி

தாளிப்பு

  1. சோம்பு-1 டீஸ்பூன்
  2. பட்டை-1
  3. லவங்கம்/கிராம்பு-2
  4. பிரியாணி இலை-1
  5. ஏலக்காய்-1

தூள்

  1. மஞ்சள் தூள்
  2. மிளகாய்த்தூள்
  3. கரம் மசாலா தூள்
  4. பிரியாணி மசாலா தூள்

காய்கள்

  1. இஞ்சி- 1 துண்டு
  2. பூண்டு-6பல்
  3. பச்சை மிளகாய்-2
  4. வெங்காயம்-1
  5. தக்காளி-1.5
  6. கேரட்-2
  7. பீன்ஸ்-100 கிராம்
  8. உருளைக்கிழங்கு-2

எக்ஸ்ட்ரா

  1. காலிஃப்ளவர்
  2. கேப்ஸிகம்
  3. மீல் மேக்கர்
  4. பிரட்

செய்முறை

இஞ்சி பூண்டு விழுது

பிரியாணிக்கு தேவையான அளவு மட்டும் தயாரிக்கும். அவ்வப்பொழுது ஃப்ரெஷ்ஷாக தயாரித்தால் அதன் சுவையே தனி.

மிக்ஸியில் மேலே கூறிய அளவில் இஞ்சி பூண்டை விழுதாக அரைக்கவும்.

பிரியாணி

காய்கறி அனைத்தையும் நறுக்கிக் கொள்ளவும். பாஸ்மதி அரிசியை களைந்து ஊறவைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களை போடவும். அடுத்ததாக வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியவுடன் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். இஞ்சி பூண்டின் வாடை மாறும் வரை வதக்கவும்.

தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கவும்.

நன்கு வதக்கிய பின்னர் காய்கறி அனைத்தையும் சேர்க்கவும். காலிஃப்ளவர்/மீல் மேக்கர் சேர்ப்பதாக இருந்தால் மஞ்சள் தண்ணீரில் போட்டு எடுத்து மற்ற காய்கறிகளுடன் சேர்த்துக் கொள்ளவும்.

அரை டீஸ்பூன் கரம் மசாலா, அரை டீஸ்பூன் பிரியாணி மசாலா சேர்த்து ஒரு கிளறு கிளறி ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி குக்கரை மூடி 2 விசில் விட்டால் பிரியாணி தயார்.

ப்ரெட் ரோஸ்ட்

வாணலியில் நெய் விட்டு பிரட்களை துண்டாக நறுக்கி வறுத்து எடுத்து பிரியாணியுடன் சேர்த்தால். அது ஒரு தனி சுவையாக இருக்கும்.

வெங்காய ரைத்தாவுடன் அள்ளி அடியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *