ஆன்மிகம்ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வதால் இவற்றை பெறலாம்

ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வதால் இவற்றை பெறலாம். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் கேது பகவானுக்கும், கேது திசை நடப்பவர்கள் விநாயகருக்கும், சூரிய பகவானுக்கும், விரதமிருப்பது வழக்கம். சூரிய விரதம் மேற்கொள்ளும் நபர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கொடிய நோய்கள் எதுவும் அண்டாது.

முகத்தில் ஒரு வசீகரம் இருக்கும். சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும். உடல்நலம் மேம்பட்டு அவரின் ஆயுள் நீடிக்கும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரீகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்கள் அண்ட விடாது.

இவ் விரதத்தை மேற்கொள்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுவதும் திட உணவு சாப்பிடாமல், நோன்பு இருந்து மறுநாள் காலையில் சூரிய தரிசனம் செய்த பின்பு, சூரிய பகவானுக்கு வீட்டிலேயே ஒரு பாத்திரத்தில் சிறுநீர் நிவேதனமாக அளித்த பின்பு விரதத்தை முடிக்க வேண்டும்.

உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பழச்சாறுகள் போன்றவற்றை அருந்தி விரதம் இருப்பார்கள். இன்றைய நாளில் சூரிய பகவானுக்கு செந்தாமரை சமர்ப்பித்து, கோதுமை தானியங்களை வைத்து, நெய் தீபங்கள் ஏற்றி, வாசனை மிக்க தூபம் கொளுத்தி, கோதுமை கொண்டு செய்யப்பட்ட இனிப்பு உணவுகளை நைவேத்தியமாக வைத்து, சூரிய பகவானின் காயத்ரி மந்திரங்கள், பீஜ மந்திரங்கள் போன்றவற்றை 108 எண்ணிக்கை அல்லது 1008 எண்ணிக்கையில் சொல்லி வழிபட நன்மை உண்டாகும்.

நமது பாரம்பரிய மிக்க இந்து மதத்தில் இறைவனை வழிபடவும். அவரின் முழுமையான அருளாற்றலைப் பெறவும். பல வகையான வழிபாட்டு முறைகள் கூறப்பட்டிருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபடுவதற்கு பல வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. இந்த வகையில் உலகிற்கு ஒளியைத் தந்து அனைத்திற்கும் உயிர் ஆற்றலை தருகின்ற சூரிய பகவானின் அருளை பெற்று தரும் ஞாயிறு விரதம், சூரிய விரதம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சூரிய திசை நடப்பவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் மிகுந்த நன்மையைப் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *