அழகர்கோவில் சுந்தர ராஜ பெருமாள்..!!
நீங்க எப்ப மதுரை போனாலும் இதெல்லாம் மிஸ் பண்ணாதீங்க. மேலும் பரீட்சை விடுமுறை மாதத்தில எப்போ நேரம் இருக்கோ அப்ப குடும்பத்துடன் சித்திரை திருவிழா போய் பாருங்க அசந்து போவீங்க. இவ்ளோ கிட்ட இருந்து இதெல்லாம் மிஸ் பண்ணோம்னு பின்னாடி வறுத்த படாதீங்க.
ஒரு முறை நீருக்கு அடியில் இருந்து நீண்ட நேரம் தவம் செய்ய வல்லவரான சுதபரிஷி. நூபுர கங்கையில் மூழ்கி பகவான் நாராயணன் தியானித்து மந்திரங்களை ஜெபித்தபடி தன்னை மறந்திருந்தார், அந்த சமயத்தில் எளிதில் மிக கோபமடைந்த துர்வாசரும், அவரை சார்ந்த மற்ற முனிவர்களும் அங்கு வந்தனர். தன்னை மறந்திருந்த சுதபரிஷி அவர்களுக்கு உரிய மரியாதையைத் தராது போக கோபம் கொண்ட ரிஷிகள் அவரை தவளையா போக சாபமிட.
சுந்தர ராஜ பெருமாள்
சுதபரும் தன் தவறுக்கு வருந்த சாபமிட்ட முனிவர்கள் மண்டூக வடிவம் பெற்ற சுதாகரை, வைகை கரையில் வந்து தங்கும்படி அழகர்கோவில் சுந்தர ராஜ பெருமாள் தக்க சமயத்தில் அவருக்கு மோக்ஷத்தை அளிப்பார் என்று கூறி சென்றுவிட்டார். அதன்படியே சுந்தரரும் மதுரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் வேகவதி என்றழைக்கப்படும் வைகை நதிக்கரையில், சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை என்று இன்று அழைக்கப்படும்.
குரு இருந்த துறையை அடைந்து தவம் செய்து வந்தார். உரிய காலத்தில் அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் அங்கு விஜயம் செய்த அவருக்கு சாபத்திலிருந்து விமோசனம் அளித்தார். இந்த நிகழ்ச்சி மாசி மாதத்தில் நிகழ்ந்தது. அன்றிலிருந்து காலம் காலமாக மாசிமாதம் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தர சுந்தரராஜ பெருமாள் வருடம் தோறும் வைகை நதிக்கு வந்து கொண்டிருந்தார்.
திருமலை நாயக்கர் காலத்தில்
திருமலை நாயக்கர் காலத்தில் மண்டூக மகரிஷி விமோசனத்திற்காக அழகர் ஆற்றில் இறங்கும் இடம் இன்றைய ஆல்பர்ட் விக்டர் பாலம் அருகில் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடக்கும் மாதமும் சித்திரைக்கு மாற்றப்பட்டு, மீனாட்சி திருக்கல்யாணம் ஒன்றாக இணைக்கப்பட்டது. இன்றும் லட்சக்கணக்கான மக்கள் பங்கு பெரும் திருவிழாவாக இந்த நிகழ்ச்சி மதுரையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
கங்கையிலும் மகிமை வாய்ந்தது சிலம்பாறு : சந்திர வம்சத்தில் உதித்த புரூரவஸ் மன்னனின் புத்திரன் இந்திரத்யும்னன். அவனுடைய புத்திரன் மலையத்துவஜன் அகஸ்திய முனிவரின் வழிகாட்டுதலின் கீழ் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். அவன் அகஸ்தியர் அருளால் பெற்ற புஷ்பக விமானம் ஒன்று தினசரி காலை கங்கைக்கு சென்று நீராடி கயாவில் பகவான் விஷ்ணுவை தரிசனம் செய்து திரும்புவான்.
ஒரு நாள் அவனுடைய விமானத்தின் நிழலானது, அழகர் மலையின் மீது விழ, அங்குள்ள முனிவர்கள் அதனைக் கீழே இழுத்தனர். அசரீரியாக சுந்தரராஜ பெருமாள் மலையத்து வஜ மன்னனிடம் “இந்த மலையில் கங்கையிலும் புனிதம் வாய்ந்தது சிலம்பாறு. என்னுடைய சிலம்பிலிருந்து பெருகி வருகிறது. அதில் நீராடி உன்னுடைய பாவங்களை தூய்மை செய்து பூஜிக்காதது ஏன்? பிரம்மாவின் ஒரு கல்பம் நான் இங்கு இருந்து அருள் பாலிக்க போகிறேன்.
தர்மம் மற்ற முனிவர்களும் இங்கு என்னை வழிபட்டு பலன் அடைந்தனர். மற்றும் பல மகான்களும், அவ்வாறே பலனடைய இருக்கின்றனர். நீயும் அவ்வாறே எண்ணி வழிபட்டு, என் இருப்பிடத்தை அடைவாயாக”, என்று கூறினார். மன்னனும் அவ்விடம் அரசை ஒப்படைத்துவிட்டு அழகர் மலையில் வசித்து சிலம்பாட்டத்தில் நீராடி பரமபதம் அடைந்தார்.