தமிழகத்தில் சில்லுன்னு மழைக்கான வாய்ப்பு
தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதியில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதிகளில் காற்றழுத்தம் நிலவுகிறது.
அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை இடி மின்னலுடன் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மார்ச் 31 ஏப்ரல் ஒன்றாம் தேதி ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் கரையோர பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏப்ரல் 2 முதல் அடுத்த வரும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கின்றது சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றது சென்னையில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் இருக்கின்றது. மேலும் சில இடங்களில் வெப்பநிலையானது மாறுபட்டு அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன