ஆரோக்கியம்

அடிக்கும் கோடை வெயிலில் வாடாமல் வதங்காமல் இருக்க..!!

கோடை காலத்தை எப்படி சமாளிப்பது வெப்பம் காரணமாக உடல் உஷ்ணம் அடையும். உடல் உஷ்ணத்தைப் போக்க இளநீர் பருகுங்கள். வேர்வையை கட்டுப்படுத்த காலையிலும், மாலையிலும் இரண்டுவேளை தினமும் குளியுங்கள். தினமும் நீர்ச்சத்துள்ள பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் நிறைய பருக வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பருகுவது உடலுக்கு நல்லது.

வாரம் இரண்டு முறையாவது கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். எலுமிச்சை, தர்பூசணி, வெள்ளரிக்காய், நீர்ச்சத்துள்ள காய்கறிகள், விட்டமின் சி உள்ள பழங்கள், நெல்லிக்காய் வகைகள், நீராகாரம், கம்பு, ராகி, சிறுதானியங்கள் எல்லாம் உண்பதால் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்.
காபி, தேனீர் பதிலாக கம்பங்கூழ் போன்ற நீர் ஆகாரங்களை அருந்துங்கள்.

வாரம் 3 முறை

சின்ன வெங்காயம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். வாரம் மூன்று முறை தலையில் தலை முடியை நன்றாக அலசுங்கள். அழுக்கு சேர விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இதனால் பொடுகு தொல்லை குறையும். தலையில் பொடுகு சேரும் போது முகத்தில் பருக்கள் எண்ணைப்பசை உருவாகலாம். இதை தடுக்க வாரம் 3 முறை தலையை அலசுங்கள்.

ஆண்கள் தினந்தோறும் தலை முடியை அலசுங்கள். அதிக காரத்தன்மை உள்ள உணவுகளை தவிர்த்திடுங்கள். ஆயில் பதார்த்தங்களையும் தவிர்த்து விடுவது உடலுக்கு நல்லது. இதனால் உடல் உஷ்ணம் குறைந்து இதனால் ஏற்படக்கூடிய சில நோய்களைத் தவிர்க்க முடியும்.

குழந்தைகளுக்கு தலையில் முடி அதிகமாக வளர விடாமல் அவ்வப்போது வெட்டி விடுங்கள். அதேபோன்று கை நகங்களையும், கால் விரல்களின் நகங்களை, கால் பாதங்களையும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளவும்.

அதிக பழங்கள் இளநீர் உண்பதால் சளி சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெயில் காலங்களில் சளி பிடித்தால் குழந்தைகளுக்கு சீக்கிரம் சரியாகாது. அதனால் உணவில் மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு பதிலாக மிளகு சேர்த்துக் கொடுக்கலாம். பொரியலில் மிளகு தூள் சேர்ப்பதால் நீங்கள் உண்ண கூடிய பழங்கள் மூலம் சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

வெஜிடபிள் சாலட், ஃப்ரூட் சாலட்

வெஜிடபிள் சாலட், ஃப்ரூட் சாலட் போன்ற சாலட் போன்றவைகளை கொடுக்கலாம். சாலட்டில் மிளகுத் தூளையும், இந்து உப்பையும் தூவி கொடுக்கலாம். இதனால் சளி சேராது.

வெயில் காலங்களில் சீசனாக கிடைக்கும் பழங்களை அதிகமாக உட்கொள்ளுங்கள். மாம்பழம் சூடு என்று அறவே ஒதுக்குவார்கள். அது தவறான கருத்து. அனைவரும் மாம்பழத்தை வெயில் காலங்களில் மட்டுமே கிடைப்பதால் இதை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. மாங்காயும் இந்த சீசனில் தான் கிடைக்கும் விலை மலிவாகக் கிடைப்பதால் இதை ஊறுகாய் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

வெயில் காலங்களில் பொருட்களை வெயிலில் காய போட்டு வைத்து எடுத்துக் கொள்வதால் கெட்டுப் போகாமலும், வண்டு பிடிக்காமலும் 6 மாதம் வரை இருக்கும். எனவே இந்த நேரத்தைப் பயன்படுத்தி உங்களுக்கு தேவையான ஸ்டோர் செய்யக் கூடிய பொருட்களை வாங்கி வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மல்லிப் பொடி, வடகம், வத்தல், ஊறுகாய், பருப்பு வகைகள் இந்த வெயில் காலங்களில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *