ஆரோக்கியம்சமையல் குறிப்புயூடியூபெர்ஸ்

Sukkumalli coffee preparation:மணக்க சுக்கு; சுவைக்க மல்லி; ருசிக்க சுக்குமல்லி காபி பொடி

நாம் என்னதான் கடையில் வாங்கி டீ, காபி குடித்தாலும் வீட்டில் குடிக்கும் காப்பியை போல வருவதில்லை. அதிலும் நமது பாரம்பரிய மணம் மாறாமல் தித்திக்கும் சுவையுடன் சுக்கு மல்லி காபி குடித்தால் அடடே எவ்வளவு அமோகமாக இருக்கும். நினைக்கும் போதே ருசிக்க தூண்டும் அளவு மல்லி பொடி காப்பியின் சுவை இருக்கும். இந்த காலகட்டத்தில் திரும்பவும் சுக்கு மல்லி காபி குடிக்கும் பழக்கம அதிகரித்து உள்ளது. நீங்கள் எங்காவது வெளியில் சென்று விட்டோ அல்லது வேலை சமையல் இருந்தாலும் இந்த சுக்கு மல்லி காப்பியை வைத்து குடித்து பாருங்கள் உங்களது மனச்சுமை நீங்கி மனதிற்கு ஒரு புத்துணர்வு உண்டாகும். வீட்டிலேயே சுவையான காபி குடிக்க சுக்குமல்லி காபி பொடி செய்ய ஒரு எளிய டிப்ஸ்.

சுக்குமல்லி காபி பொடி செய்ய தேவையான பொருட்கள்

கொத்தமல்லி – 5 கப்

சுக்கு – 5 துண்டுகள்

மிளகு – 5 கப்

சீரகம் – 3 கப்

ஏலக்காய் – 6

கிராம்பு – 6

மேலும் படிக்க : குழந்தைகளுக்கு பிடித்த காபி வால்நட் ரொட்டி…!

காபி பொடி செய்முறை

சுக்கு , மல்லி , சீரகம், மிளகு , ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வாணலியில் போட்டு நன்கு சூடுவர வறுத்துக் கொள்ளவும். சிறிது நேரம் ஆறிய பின் மிக்சியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து சுத்தமாக சலித்து வைத்துக் கொள்ளவும்.ஒரு டம்ளர் காபிக்கு நாம் அரைத்து வைத்த காபி பொடியில் ஒரு ஸ்பூன் போட்டால் போதும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் காபி பொடி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொண்டு அதில் பால்,சர்க்கரை ஆகியவை சேர்த்தால் போதும் சுவையான சுக்கு மல்லி காபி ரெடி.

இந்த காபியை பருகும்போது உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். சளி,இருமல் உள்ளவர்கள் காபி கொதிக்கும் போது அதில் துளசி,கொய்யா இலை போன்றவற்றை சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கும் போது சளி, இருமல், தலைவலி ஆகியவை பறந்து விடும்.

மேலும் படிக்க : ஐ காபி! சர்வதேச காபி தினம்

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *