சினிமா

என்ன படம் பா சஃபியும் சுஜாதயும் : திரை விமர்சனம்

சுஃபியும் சுஜாதயும் அமேசன் பிரைம் இன் எக்ஸ்ஸ்ஸிப் ஆஃ 3 ஜூலை 2020 ரிலீசான இந்தப் படம் வரவேற்கப் படவில்லை என்பது வருத்தம்தான். இரண்டு தமிழ் படத்தை தொடர்ந்து இந்த மலையாள படமும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஊர் இடங்களை வீட்டிலேயே அடைந்து இருக்கிற மக்களுக்கு நல்ல மாஸா என்டர்டேயின் செய்யற மாதிரி படம் வரமாட்டேங்குது. மாசான படத்தை OTTல ரிலீஸ் பண்ணினா அந்த திரைப்படகுழுவுக்கு பெரும் லாஸ்தான்.

சுஃபியும் சுஜாதயும்

இயக்குனர் நாரானிபுழா ஷானவாஸ் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபு தந்த படம் சுஃபியும் சுஜாதயும்.

ஜெயமோகன் சுஃபியாகவும் அதித்ய ராய் சுஜாதாவாகவும் இவர்களுக்கு நடுவில் ராஜீவ் எனும் கதாபாத்திரத்தில் ஜெயசூர்யா அவர்கள் நடித்துள்ளார். சுஃபியும் சுஜாதாவும் காதலிக்கின்றனர் மத வேறுபாட்டினால் சுஜாதாவின் வீட்டினர் இக்காதலுக்கு சம்மதிக்காததால் அவளுக்கு ராஜீவை திருமணம் செய்து வைக்கின்றனர். ராஜிவ் ஒரு தலையாக சுஜாதாவை காதலித்த வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞன். இந்த கதைக்கருவை கொண்டுள்ள இத் திரைப்படம் இசை நாட்டியம் காதல் உறவுகள் போன்றவற்றை பற்றி பேசுகிறது.

அதிதி ராய் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் ஒரு கதக் டான்ஸராக அசத்தியுள்ளார். நாட்டியக் கலையில் இருக்கும் பெண்மணிக்கு அபிநயத்திற்கு குறைவிருக்காது. அதுவும் ஊமை பெண்மணிக்கு கை அசைவுகள் முக்கியம் இவ்விரண்டு பாணியையும் பாராட்டத் தக்க விதத்தில் செய்யவில்லை என்பது வருத்தம்.

சுஃபி என்ற சொல் இஸ்லாமியத்தில் துறவறத்தை குறிக்கும். காதலுக்கு கண்ணில்லை என்ற வாக்கியம் போய் காதலுக்கு மொழியும் இல்லை என்ற வாக்கியம் பல கதைகளில் உண்மையாக இருந்தாலும் இந்த கதையில் பர்ஃபெக்ட்டாக செட் ஆகுகிறது. நாட்டியம் மற்றும் இசையால் இவ்விருவரும் இணைய சுஃபி தன்னுடைய ஜெபமாலையை அளித்து கூறும் டயலாக் காதலிக்கும் நெஞ்சங்களுக்கு நெருக்கமாக அமைகிறது. காது கேட்கும் சுஜாதாவிற்கு வாய் பேச முடியவில்லை எப்படி என்று கேட்கும் சுஃபியின் கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியுள்ளார் தேவ் மோகன்.

துணைக் கதாபாத்திரமான சுஜாதாவின் தாய் தந்தை பாட்டி மகிழுந்து ஓட்டுனர் மற்றும் சுஃபியின் மாஸ்டர் அபூப் அவரவர் பங்கினை பிரமாதமாக நடித்துள்ளனர். சுஜாதாவின் தந்தை அபூப் இடம் பேசும் காதல் ஜிஹாத் என்னும் சென்சிடிவான விஷயம் மேலும் விரிவு படுத்தி இருக்கலாம்.

ராஜீவ் சுஜாதா வாழ்க்கை காதலித்து தோற்று போய் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து நடத்தும் நிதர்சனமான வாழ்க்கையை கூறியிருந்தது. எவ்வளவுதான் அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்தாலும் அவர்களிடையே காதல் இல்லாவிட்டால் வாழ்க்கை சந்தோஷமாக முழுமையாக இருக்காது என்பதை இந்த கதாபாத்திரங்கள் கூறியது.

திரைப்படத்தில் கூறிய கருத்துக்கள் பாராட்டப்பட வேண்டியவை ஆனால் கூறிய விதம் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கலாம். கதை மரண ஸ்லோவாக இருந்தது. இதமான இசையில் சென்ற இந்த திரைப்படத்திற்கு சுமாரான மார்க் தான் தரமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *