திருப்பூர் காங்கயம் ரோட்டில் தாயும் மகனும் தற்கொலை செய்தது பேரதிர்ச்சியாக உள்ளது
திருப்பூர் காங்கயம் ரோட்டில் ஜெய் நகர் பகுதியில் வசித்து வந்த மகுடேஸ்வரன் ஒரு பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரின் மனைவி நித்யா மற்றும் இவர்களுக்கு ஒரு வயதில் தர்ஷன் என்ற ஆண் மகனும் இருக்கிறான்.
மகுடேஸ்வரன் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். இவர்கள் மேல் வீட்டில் குடியிருந்த நித்தியா நீண்ட நேரமாகியும் கீழே வராமல் இருந்திருக்கிறார். அக்கம் பக்கத்தினர் மேலே சென்று பார்த்துள்ளனர்.

நித்யாவை பெயர் சொல்லி அழைத்தும் பார்த்துள்ளனர். வீட்டிலிருந்து ஒரு சத்தமும் வரவில்லையே என்ற நினைப்புடன் அக்கம் பக்கத்தினர் வீட்டில் வந்து பார்த்துள்ளனர்.
வந்து பார்த்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. அப்போது நித்யா தூக்கில் தொங்கிய படி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் இந்த தகவலை போலீசாருக்கு தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கியபடி இருந்த நித்யாவின் உடலையும், கட்டிலில் இறந்துகிடந்த குழந்தை தர்ஷன் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் காவல்துறை. ஒரு வயது குழந்தையை கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயும் மகனும் தற்கொலை செய்த விஷயம் ஜெய் நகர் மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. எதனால் இப்படி செய்து கொண்டார் என்பதை குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அக்கம்பக்கத்தினரிடம் இதுகுறித்து விசாரித்து உள்ளனர்.