செய்திகள்தேசியம்

ஜெய்ஹிந்த் நாயகன் பிறந்த தினம் இன்று

இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளானது “பராகிராம் திவாஸ்” என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது.

வருட வருடம் ஜனவரி 23 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினமானது நாடு முழுவதும் நினைவுகூர்ந்து மரியாதை செய்யப்படுகின்றது. நடப்பாண்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறப்பு நாளானது இந்திய தேசத்திற்கு என்றுமே ஒரு பெரிய தேசிய முக்கியமான நாளாக இருக்கின்றது.

இந்திய சுதந்திரத்திற்கு போராடிய முக்கியமான தலைவர்களில் இவரும் ஒருவராவார். இந்தியாவில் காந்தியைப் போல நேதாஜி சுபாஷ் பிறந்த தினமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய தேசிய சுதந்திரத்திற்காக “ரத்தத்தை கொடு சுதந்தரத்தை தருகிறேன்” என்று இளைஞர்களை ஒன்று திரட்டினார். இந்தியாவில் ஐஎன்ஏ உருவாக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆவார்.

வீர நாள்


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினமானது “தைரியம், வீரம் தினமாக” அனுஷ்டிக்கப்படுகின்றது. 2021 ஜனவரி 19ஆம் தேதி நேதாஜி அவர்களின் பிறந்த தினத்தை “பராகிரம் திவாஸ்” நாளாக கொண்டாடப்படுவது குறித்த அரசு ஆணை வெளியிடப்பட்டது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய மண்ணில் வீர தீர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

126 வது பிறந்தநாள் சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தியாக மக்கள் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகின்றனர். தன்னலமற்ற சேவையை நாட்டிற்கு செய்ததில் எந்த ஒரு பங்கும் எதிர்பார்க்காமல் தனித்து நாடு விட்டு நாடு பயணித்து அங்குள்ள தேச பக்தர்களை ஒருங்கிணைத்தார்.

ஆசாத் ஹிந்பவுச் :

இந்திய தேசியப்படையை உருவாக்கிய பெருமை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களையே சாரும். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரை நோக்கி ஐஎன்ஏவில் இணைந்து முக்கிய பங்காற்றினார். “ஆசாத்ஹிந்பவுச்” உருவாக்கிய பெருமை நேதாஜியை சேரும் விவேகானந்தரை தனது ஆன்மீக குருவாக கொண்டவர். “ஜெய்ஹிந்” மந்திர சொல்லை கர்ஜித்து இளைஞர்களை வழி நடத்தினார். ஜெய்ஹிந் நாயகன் என்றும் அவரை அழைக்கலாம்.

நேதாஜி பிரபாவதி போஸ் அவரது தாயாரின் பெயர் ஆகும். மேலும் இவர் பிரசிடென்சி காலேஜில் கல்கத்தாவில் படித்தார். பிரிட்டிஷ் சிவில் சர்வீஸ் தேர்விலும் வெற்றி பெற்றிருந்தார். 1921 பிரிட்டிஷ் அரசின் ஐசிஎஸ் பட்டத்தை துறந்து, இந்தியாவின் சுதந்திரத்திற்காக பங்காற்ற இந்திய திரும்பி வந்தார். 1938 முதல் 1939 வரை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தார். துடிப்பு மிக்க பேச்சு, தேச விடுதலைக்கான படை அமைப்பு என இளைஞர்களை கவர்ந்து செயல்பட்டார். சுதந்திரத்திற்கு பின்பு இந்தியாவிற்குள் வராமலேயே இன்று வரை இந்திய இளைஞர்களின் மனதை ஆட்சி செய்யும் மாபெரும் ஆளுமை வீரம் நிறைந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

மேலும் படிக்க:

நம்பிக்கை இழக்காத சுபாஷ் சந்திர போஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *