கல்விதேர்வுகள்பத்தாம் வகுப்புபன்னிரண்டாம் வகுப்பு

தேர்வுகால ஒற்றுமையான கூட்டுப் படிப்பு வெற்றியைத் தரும் மாணவர்களே!

மாணவர்களுக்கு பரிட்சை காலம் என்பதை குடும்பத்தினர் அனைவரும் உணர்ந்து பக்கபலமாக செயல்பட வேண்டும். 

பொதுதேர்வுக்கு படிக்கும் பொழுது மாணவர்கள் நீட் தேர்வு குறித்த கண்ணோட்டத்தில் ஸ்பெஷல் கிளாஸில் இணைந்து படிப்பவர்கள் அதிகம். 

ஆசிரியர்கள்  இல்லை நம்மை கண்டுகொள்ள யாரும் இல்லை என எண்ண வேண்டாம். மாணவர்களே உங்களுடைய வாழ்க்கை உங்களுடைய எதிர்காலம், என்பதை மனதில் வைத்து படிக்கவும். 

மொபைல் பயன்பாட்டை குறைத்து கொண்டு படிப்பில் ஆர்வம் காட்டவும். பெற்றோர்கள் ஆசிரியர்கள் கவனத்திற்கு உங்கள் ஸ்மார்ட் போன் அறிவை  மூட்டை கட்டிவைத்து விட்டு  மாணவர்களிடம் கைபேசி பயன்பாட்டை  அனுமதிக்க வேண்டாம். மேலும் இப்பொழுதுள்ள ஆப்களால்  மாணவர்கள் அதிக அளவில்   நேரத்தை செலவிட்டு  தேர்வு நேரத்தை வீணடிக்க வாய்ப்புள்ளது  இதனைப் பெற்றோர்கள் கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும். 

உங்களுடைய படிப்பு  நேரத்தை கணக்கிட்டு அதற்கேற்றார்ப் போல்  திட்டமிட்டு படியுங்கள் நேர மேலாண்மை சரியாக இருந்தால் நிச்சயம் வெற்றி வசப்படும். 

வானமே எல்லை என்பதை மனதில் வைத்து தேர்வை எதிர்கொண்டு படிக்கவும். தேவையற்ற மன குழப்பம் தேர்வு மதிபெண்கள் குறித்த பய உணர்வு போன்ற நெருக்கடியான சூழல்களை  உங்களுக்குள் அனுமதிக்காதீர்கள், ஃபிரி பேர்டாக இருங்கள் நிச்சயம் என்னால் முடியும் என்று பாஸிடிவ் திங்கிங் உடன் இருக்க வேண்டும். 

எந்த   பாடத்தில் எவ்வளவு மதிபெண்கள் எடுக்க அதற்கு எப்படி படிக்க வேண்டும் என்று திட்டமிட்டு  படியுங்கள், ஸ்மார்டான மாணவர்கள் நீங்கள் அதனால்  ஸ்மார்டாக செயல்பட வேண்டியது அவசியமாகின்றது. 

நம்முடைய கடினமான சூழல்களை கொண்டுதான் நம்முடைய திறன்கள் மதிப்பிடப்படுகின்றன. மாணவர்களே நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் உங்களுக்கு உதவ  இங்கு அனைத்து சூழல்களும் சரியாக உள்ளன, அதனை உங்களுக்கேற்றார்போல் பயன்படுத்தி வெற்றி பெறவும்.

கணித   பாடங்கள், அறிவியல் குறியீடுகள்,  வரலாற்றுப் போர்கள், நாட்டு வாருமானம் ஒவ்வொரு பாடத்திற்கும் தனிசிறப்புகள் உண்டு அது படிப்பதற்கான வழிமுறைகள் உண்டு அதனை தெரிந்து படியுங்கள். 

தேர்வுகாலத்தில் வேலை செய்து படிக்கும் மாணவர்களே நீங்கள் உங்கள் நிலையை எண்ணி  பெருமைப் படுங்கள், நீங்கள் இன்று சிந்தும் இந்த வேர்வைத்துளியானது நாளைய வெற்றி  ஆனந்த கண்ணீர் துளியை கொடுக்கும். உங்களை சொந்தக் காலில் நிக்க வைக்கும் என்பதை அறிந்து படிக்கவும்.

காமராஜ், இராமன் இரு நண்பர்கள்  மஞ்சு, ராணி பள்ளிகளில் சிறந்த போட்டியாளர்களாகப் படிப்பில் சிறந்து விளங்கினார்கள்.  அவர்களின்  மற்ற திறனுகளும் பெருக்கேற்றிக் கொண்டே பள்ளியில் படித்தனர். தேர்வு காலத்தில்  நட்பாக  இணைந்து படித்து கொண்டு ரிவிசனை மற்ற வகுப்பு மாணவர்களுடன் இணந்து படித்து அவர்களுக்கும் கற்றுக் கொடுத்தனர். 4 பேர் இணைந்து கிராம பள்ளி நண்பர்களையும் கரையேற்றச் செய்தனர். இவ்வாறு ஒவ்வொருவரும் காழ்ப்புணர்ச்சி, போட்டி, பொறமை என்றிருக்காமல் ஒருகொருவர் உதவி செய்து தேர்ச்சி பெறுங்கள் நாளை பாரதம்  நீங்கள் அதன் காரணம் என்பது  என்றும் உங்களுக்குள் ஒலிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *