புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிவிப்பு
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம். காற்றழுத்தம் வரும் 25ஆம் தேதி புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளனர். புயலுக்கு நிவர் என பெயரிட்டுள்ளனர். நவம்பர் 25இல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளன.
- வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் வரும் 25ஆம் தேதி புயலாக மாறி கரையை கடக்கும்
- நவம்பர் 25இல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புயல் கரையை கடக்கும்
- புயலுக்கு நிவர் என பெயரிட்டுள்ளனர்.
நிவர் புயலும்
கஜா புயலால் அதிக பாதிப்பை கண்ட வேதாரண்யம் பகுதியில் நிவர் புயலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நிவர் புயல் அறிவிப்பை அடுத்து டெல்டா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்து வருகின்றனர்.
தென்னை மரங்களின் மட்டைகளை வெட்டி பாதுகாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். புயலால் ஏற்படும் அச்சத்தால் பலரும் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளை கலட்டியும் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வானிலை ஆய்வு மையம்
இன்று முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது.
இரண்டு நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 25ஆம் தேதி தெற்கு தமிழகம் நோக்கி நகரும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளன.
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
புயல் முன்னெச்சரிக்கை
கடந்த புயல் முன்னெச்சரிக்கை இல்லாமல் பல தென்னை மரங்களை இறக்க நேரிட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதாக அப்பகுதி மக்கள் தற்போது தெரிவித்து உள்ளனர்.
வானிலை ஆய்வு மைய தகவலின்படி புயலானது நவம்பர் 25ல் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.