சிற்றரத்தை எப்போதும் வீட்டில் வைத்திருங்கள்..!!
பக்கவிளைவு இல்லாத இந்த சிற்றரத்தையை, குழந்தைகள் உள்ள வீட்டில் எப்பொழுதும், இருப்பு வைத்துகொள்வது அவசியம். இதன் தூளுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் சளி, இருமல் குணமாகும். வெயில் காலங்களில் பயன்படுத்த கூடாது. மழைகாலங்களில் ஏற்றது. சிறந்த மணமூட்டியாக இருக்கும் இதை சிறிது வாயில் இட்டு சுவைக்க வாய் துர்நாற்றம் போவதுடன், ஈறுகளில் உள்ள நோய்த்தொற்று சீராகும்.
சிறந்த மணமூட்டி
சிற்றரத்தை பொடி, அதிமதுர பொடி,இரண்டும் அரை தேக்கரண்டி எடுத்து, இதனுடன் சுக்கு,மிளகு,திப்பிலி கலந்த திரிகடுக பொடி அரை தேக்கரண்டி சேர்த்து அரை லிட்டர் நீரில் சேர்த்து சுண்ட காய்ச்சி வடித்து இது காரமாக இருக்கும் என்பதால் தேன் கலந்து கால் டம்பளர் அளவு குடிக்கலாம். வயிறு புரட்டல், மூக்கடைப்பு, சளி, ஒற்றை தலைவலி போகும். நாளைக்கு ஒரு வேளை மூன்று நாட்கள் பருகலாம்.
நெஞ்சு கோளாறுகள்
நான்கு பல் பூண்டு, சிற்றரத்தை பொடி கால் ஸ்பூன், ஒன்றரை ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, கொதி விட்டு வடிகட்டி, தேன் கலந்து குடிக்க, நா வறட்சி அறவே நீங்கும், ரத்த அழுத்தம் குறையும், கொழுப்பை கரைக்கும். வயிறு கோளாறு, வயிற்று புண், வாயு கோளாறுகள் உட்பட நெஞ்சு கோளாறுகள் நீங்கும்.விந்தணுக்களை உற்பத்தி செய்யும் ஆற்றலும் இதற்க்கு உள்ளது என்பதால் முன்னோர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தனர்.
இந்த பொடியை தேனில் கலந்து குழந்தைக்கு கொடுக்க கக்குவான் இருமல் தாக்கம் குறைந்து இழுப்பும் குறையும். சிற்றரத்தை, பனங்கற்கண்டுடன் சேர்த்து நீரில் கலந்து கஷாயமாக வைத்து நாளுக்கு இரண்டு வேளை உணவிற்கு பின் குடிக்க வறட்டு இருமல், சளி குணமாகும். சளி கரைந்து மலத்தில் வெளியேற்றும்.
தாமரை பூ, சிற்றரத்தை சம அளவு எடுத்து பொடி செய்து, தினமும் காலை அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். சிற்றரத்தை, அமுக்கரா, சுக்கு மூன்றும் பொடி செய்து காலை, மாலை என இரு வேளை சாப்பிட மூட்டு வலி, வாத நோய் அனைத்தும் குணமாகும்.
கபத்தை வெளியேற்றும்
‘அறத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்?’ என்று சொல்வழக்கு உள்ளது. அந்த அளவிற்கு தொண்டையில் சேரும் கபத்தை, வெளியேற்றும் சக்தி சிற்றரத்தைக்கு உள்ளது. நம் உடலில் தோன்றும் நோய்களை தடுக்கும் சுவர் போன்றது தொண்டை. தொண்டையை பாதுகாக்க சிற்றரத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட இதன் காரத்தன்மை, விறுவிறுப்பு கலந்த தன்மையானது இருமலை போக்கும். தொண்டையை பாதுகாக்கும்.
உடல் சூடு காரணமாக வரும் இருமலுக்கும் சிற்றரத்தை உடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.