கற்கால மனிதன் அவனது வாழ்க்கை முறை குறிப்பு!
பழங்கற்கால மனிதர்கள்:
ஆதிமனிதர்களை பழங்கால மனிதர்கள் மற்றும் புதிய கற்கால மனிதர்கள், உலோக மனிதர்கள் என மூன்றாக பிரிக்கலாம். பாலியோலித்திக் என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்தது, பாலியோ என்றால் பழைய மற்றும் ‘லித்திக்’ என்பது கல் என்று பொருள்படும்.
கி.மூ 10,000 முற்பட்ட காலம் பழங்கற்காலம் என்று அழைக்கப்படுகின்றது. இந்தியாவில் ஆதிமனிதன் முதன் முதலில் வாழ்ந்த இடம் மேற்கு பஞ்சாப் மலையடிவாரம் எனப்படுகின்றது.
இந்தியாவில் பழைய கற்காலத்தை பற்றிய அறிய அக்கால மக்கள் பயன்படுத்திய கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட சுரசுரப்பான ஆயுதங்கள் உதவுகின்றன.
ஆதிமனிதன் முதன் முதலில் வாழ்ந்த மேற்கு பஞ்சாப் அடிவாரத்தில் பயன்படுத்திய கற்களின் பெயர் குவார்ட்சைட் கற்கள் என அழைக்கப்படுகின்றது.ஆதலால் குவார்ட்சைட் மனிதன் என்று அழைக்கப்பட்டார்கள்
தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், வட ஆற்காடு, செங்கல்பட்டு, கடம்பை, ஆந்திராவில் குண்டூர், கோதாவரி, நெல்லூர், மைசூர், மேற்கு பஞ்சாப் போன்ற பழங்கால மக்களின் சின்னங்கள் கிடைக்கபெற்றன.
நாடோடிகளாகவே வாழ்ந்தனர். மரப்பட்டைகள், இலை, தழைகளை ஆடையாக அணிந்து வாழ்ந்து வந்தனர்.
விலங்குகளின் மாமிசம், பழங்கள், காய்கள் முதலியன அவர்களின் உணவு ஆதாரங்கள் ஆகும்.
புதிய கற்கால மனிதன்:
புதிய் கற்கால மனிதன் குறித்த ஆய்வுகள் சென்னை, கடப்பை, பெல்லாரி, கர்நூல், ஹைதிராபாத் போன்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
புதிய கற்கால மக்கள் கிராமங்கள் அமைத்தனர். நிலையான வாழ்வு வாழ்ந்தனர். விவசாயம் செய்தனர்.
புதிய கற்கால மனிதர்கள் நெருப்பு கண்டுபிடித்தனர். நெருப்பை கொண்டு உணவை சுட்டு உண்டனர்.
ஆடு, மாடு, பன்றி, நாய், கோழி, வீட்டு விலங்குகள் பழக்கப்படுத்தினார்கள் மட்பாண்டங்கள் தயாரிக்கவும் பல வண்ண ஓவியங்கள் தீட்டினார்கள்.
இறந்தவர்களை மட்பாண்டங்களில் இட்டு புதைத்தனர், கூரைகள், தூண்கள், கற்கள் கொண்டு கல்லரைகள் உருவாக்கினார்கள் அவையே டாலமெண்ட் கல்லரைகள் எனப்படுகின்றது.
பருத்தி கண்டுபிடித்து அதன் மூலம் ஆடைகள் நூற்றல் கற்றனர். வேட்டையாடுதல் படகு கட்டுதல் அறிந்திருந்தனர். புதிய கற்கால மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர்.
உலோக காலம் :
உலோக காலம் என்பது செம்பு பயன்படுத்திய காலம் ஆகும். வட இந்தியாவில் கல் செம்பு காலம் துவங்கும் பொழுது தமிழ்நாட்டில் இரும்பு காலம் துவங்கியுள்ளது.
ஆதிச்ச நல்லூர் இந்தியாவிலே மிகப் பரவலான தொன்மைமிக்க வரலாற்றுக்கு மிக்க ஆய்வு காலம் என அலெக்ஸாண்டர் ரே கூறியுள்ளார்.
இரும்பை கொண்டு விவாய பொருட்களை தயாரித்தனர். இதன் உருவாக்கம் மெசபடோமியாவுடன் வாணிகத்திற்கு வகை செய்தது.
புதிதாக தேர்வுக்கு படிப்போருக்கும், தேர்வு குறித்த அறிந்தோர் அனைவருக்கும் இந்த தொகுப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதனை தொடர்ந்து படியுங்கள் தேர்வினை வெற்றி பெறுங்கள்.