நாய்கள் மீது ஸ்டிக்கர்…திமுகவினர் அட்டூழியம்..!
தெருநாய்கள் மீது திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். சில தொண்டர்கள் ஒருபடி மேலே சென்று, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், விஜய் போன்று வேடமணிந்து வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். மேலும் முன்னாள் அமைச்சர்கள், ஆளும் கட்சியினர் என பலர், டீ கடைக்கு சென்று டீ போட்டு கொடுத்து, ஒரு ஓட்டலுக்கு சென்று தோசை சுட்டு கொடுப்பது, செருப்பு கடைக்கு சென்று செருப்பு தைத்துக் கொடுப்பது என்று வித்தியாசமாக செய்து வேட்பாளர்களை கவர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக வேட்பாளரின் ஸ்டிக்கர் தெருநாய் மீது ஒட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சாவூர் கரந்தை பகுதியில் நாலாவது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுமதி இளங்கோவன் தேர்தல் பிரச்சார துண்டுப் பிரசுரம் தான் ஒரு தெருநாய் மீது ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த நாய் அவதிப்பட்டு வருகிறது. அந்த ஸ்டிக்கரை அகற்ற முடியாமல் படுத்து புரண்டு வருகிறது. ஆனால் அந்த துண்டு பிரசுரம் கீழே விழவில்லை. இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் விலங்கின ஆர்வலர்கள் இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.