கொரனா -வதந்திக்குப் பயப்படாதீங்க..!! பாதுகாப்பாக வீட்டில் இருங்கள்..
கொரனா பயம் நம் நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அது பற்றிய வதந்திகள் வைரஸை விட வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. உங்கள் தேவையற்ற பதட்டத்தைக் குறைக்கவே இந்தப் பதிவு. ஏறக்குறைய என்பது நாட்டு மக்களைப் பீதியடையச் செய்த கொரனா, இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருப்பது உண்மைதான். அதைப் பயன்படுத்திக் கொண்டு அறியாத பாமர மக்களை சமூக ஊடகங்களின் வழியாகப் பயமுறுத்துவது எந்த மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை. இயல்பாகவே நம் மக்களுக்கு உடல் நலம் குறித்த பயம் எப்போதும் இருந்து வருகிறது. சில வணிக நோய்களால் சில மருத்துவர்கள் தொடங்கி வைத்த பீதி அது.
முழு உடல் பரிசோதனை என்ற வணிக உத்தியைப் பயன்படுத்தி கிராமப்புற மக்களை நோய் குறித்த பயத்திலேயே வைத்திருக்கும் ஒரு சில மருத்துவமனைகளில் ஏற்படுத்தப் பெற்ற செயற்கையான பீதி அது. நவீன உணவுப் பழக்கவழக்கத்தின் காரணமாக, நம் மரபணுவுக்குப் பழக்கமில்லாத உணவுகளை உட்கொள்ளும் வாழ்க்கை முறையில் நோய்கள் தவிர்க்க இயலாதவை. என்றாலும், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் மீது நம்பிக்கை வைக்ககாமல், உடனே மருந்துக் கடைகளில் நாமாக மருந்து வாங்கி உட்கொள்வதும், என்ன அறிகுறி என்றாலும் அதை கூகுளில் srearch செய்து பார்த்துப் பயந்து நாமாகவே நமக்கு இந்த வியாதிதான் வந்து விட்டது என்று பயந்து சிறப்பு மருத்துவர்களைத் தேடிப்போய் பர்ஸ் – ஐ கவிழ்த்துவதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது.
நோய் வந்தால் மிகக் குறைந்த பட்சம் ஒரு நாளாவது நம் உடலுக்குள் இருக்கும் மருத்துவனுக்கு வேலை கொடுக்க வேண்டும். சரி கொரனாவுக்கு வருவோம். ஒரு புது நோய் பரவுகிறது. அதில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை நல்லதுதான். அதைப் பற்றி உரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, யார்? என்ன சொன்னாலும் நம்பி பயந்திருக்கத் தேவையில்லை.
கொரனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்கு உகந்த தட்பவெப்பநிலை இந்தியாவில் இல்லை. காரணம் 27 டிகரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் அந்த வைரஸ் சற்று வீரியம் குறைந்து விடும். காற்றின் வழி பரவப் போவதில்லை. நிலப்பரப்பு வழிதான் பரவக் கூடியது. கொரனா வைரஸ் அளவில் பெரியது. 400 இலிருந்து 500 மைக்ரான் அளவுடையது. அதற்கு முன்று அடுக்கு கொண்ட முகமூடிதான் கட்டாயம் என்றில்லை. வழக்கமான கைக்குட்டை போன்ற துணிகளே போதுமானது. கட்டாயம் செய்ய வேண்டியது கைகளைச் சுத்தமாக வைத்திருப்பதும் இருமும் போது வாயைப் பொத்திக் கொள்வது மட்டுமே.
மேலும் ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவரையும் கொரனா வைரஸ் தாக்காது . மிகக் குறைந்த நோய் எதிர்பாற்றல் கொண்ட நோய் தாக்கும் வாய்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு சிலரைத்தான் இந்நோய் தாக்கும். ஆன்லைன் மூலமெல்லாம் பரவாது. இதைப் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்பேதும் இல்லை. வதந்திகளை நம்புவதும் அதை அப்படியே Forward செய்து பரப்புவதும் வேண்டாமே. நீங்கள் அனைவரும் பூரண உடல்நலத்தோடுதான் இருக்கிறீர்கள். வைரஸை விட வலிமையானவர்கள் நீங்கள். வருமுன் தடுத்து வளமோடு வாழ்வோம்.
மேலும் படிக்க: