அடிச்சது லக்கி பிரைஸ் பொதுத்தேர்வு இரத்து ஆல்பாஸ் மாணவர்களே
இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடிச்சது லக்கி பிரைஸ் அனைவருக்கும் தேர்வு இன்றி ஆல் பாஸ் பன்னுங்கப்பா என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரானா பாதிப்பு மக்களை பெரிதும் பாதித்து வருகின்றது லட்சக்கணக்கில் பாதிப்பு அதிகரிக்கும் என அனைவரும் பயந்து நடுங்கும் நிலை உள்ளது.
ஆல்பாஸ்:
இந்த ஆண்டு 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு அனைத்தும் முடிந்தன அவற்றின் விவரங்கள் அறிவிப்பதாக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கோவித்-19 தொற்று தமிழகத்தில் அதிகரிப்பு காரணமாக 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவது தவிர்க்கமுடியாத காரணம் ஆகும். மேலும் இந்த ஆண்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு கோவித்-19 காரணமாக நாட்டில் அரசுத் துரைக்கு தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கான தேர்வுகள் ரத்து அனைவரும் ஆல் பாசன அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கும் காரணமாக நாட்டின் பல்வேறு அரசுத் துறை தேர்வுகள் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடங்களுக்கான ஹால் டிக்கெட் கிடைத்தும் தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரானா தொற்றால் தேர்வு நடத்துவதை அரசு நிறுத்தியுள்ளது.
அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் சென்னை போன்ற மாவட்டங்களில் கொரானாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு நிறுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே முதலமைச்சர் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் மேற்கொண்ட நீண்ட ஆலோசனையின் அடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில் அரசு இந்த முக்கிய முடிவை அறிவித்துள்ளது இன்று பகல் 12.20 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சியில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வுகள் இரத்து செய்வதுடன் இந்த ஆண்டு முழுமையாக நிறுத்தப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று அறிவித்துள்ளார்.
பெற்றோர்கள் திருப்தி:
11ஆம் வகுப்பு மாணவர்களுக்காகவும் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்ததை அடுத்து வீட்டில் உள்ள பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரானா தொற்றால் பிள்ளைகளுக்குப் பிரச்சனை வருவதை பெற்றோர்கள் ஏற்கவில்லை.
காலாண்டு, அரையாண்டு மார்க்:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வருகைப் பதிவேடு 20% ஆகியவை கொடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு பொருத்தவரை தேர்ச்சி பெறாதவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது என்பதை முதலமைச்சர் அறிவித்தார் ஆக மொத்தம் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் லக்கி ப்ரைஸ் கொரானா மூலம் கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் மாணவர்கள் அடுத்து என்ன என்று பார்க்கலாம்.