ஜிடிபியில் ஸ்டார்ட் அப் பங்களிப்பு
கோவிட்-19 தாக்கத்தின் காரணமாக செயல்பாடுகளை நிறுத்திய ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக சிரமத்தில் உள்ள ஸ்டார்ட்அப்கள் பற்றிய மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதுபற்றிய தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எம்எஸ்எம்இ-க்கள் பற்றி அரசாங்க தரவுகளும் கிடைக்கவில்லை. ஏனெனில் இந்த பொது முடக்கம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை தற்காலிகமாக பாதித்துள்ளன. என்று எம்எஸ்எம்இ அமைச்சக அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்துள்ளார்.
புதிய ஸ்டார்ட்அப்களால் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பியூஸ் கோயல் டிபிஐஐடி யால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களின் வேலை வாய்ப்புகள் 2017 இல் 49,648 லிருந்து 2018 இல் 95,338 ஆகவும், 2019 இல் 1,54,558 ஆகவும் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 6 இல் 2020 நிலவரப்படி மொத்தமாக உள்ள 34,267 ஸ்டார்ட் அப்களால் 4,22,986 வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 80,714 வேலை வாய்ப்புகளும், கர்நாடகாவில் 71,533 வேலைவாய்ப்புகளும், டெல்லியில் 49,497 வேலைவாய்ப்புகளும், உத்தரப்பிரதேசம் 33,803 வேலை வாய்ப்புகளும், ஹரியானா 29,770 ஆகிய மாநிலங்கள் வேலை வாய்ப்புகளில் முதலிடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் முனைவோர் வாய்ப்புகள் புதிய முயற்சிகள் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் நாட்டில் முதலீட்டை அதிகரிப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக ஸ்டார்ட் அப் செயல்பாடு இருக்கின்றது. ஆனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் பங்களிப்பு குறித்த தகவல்கள் இன்னும் அரசாங்கத்தால் பதிவு செய்யப்படவில்லை என்று வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் சீனாவை பின்பற்றி 8900 – 9300 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் களுடன் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் அமைப்பாக இந்தியா உள்ளது என்று நாஸ்காம் தொடக்க அறிக்கை 2019 தெரிவித்தது. பேடிஎம், பைஜூஸ், ஓயோ, பிரஷ் வொர்க்ஸ், துருவா, உடான் போன்ற நிறுவனங்கள் தற்போது ஸ்டார்ட்அப் அமைப்பால் தான் வழி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் டிபிஐஐடி இதுவரை 37,385 நிறுவனங்களை ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்டார்ட்-அப் களாக அங்கீகரித்துள்ளன.