மருத்துவம்

தீபாவளி முதல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை பழக்கமாக்குங்க!

தீபாவளிக்கு நாம் எண்ணெய் குளியல் செய்வோம். எண்ணெய் குளியல் பொதுவாக நம்மை ஆற்றல் மிக்க ஆரோக்கியமானவர்களாக வழிவகை செய்யும். 
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தைராய்டு சரிசமமாகும். உடலிலுள்ள தோல்வியாதிகள் சொரியாசிஸ், அல்சீமர் போன்ற அனைத்தும் குணப்படும். ரூமாட்டாய்டு சரியாகும், பெண்களுக்கு உண்டாகும் ஃபைலாய்டு கட்டிகள் சரியாகும்.  மூட்டுவலி முழங்கால் வலி, இடுப்பு வலி ஆத்தரிட்டிஸ் ஆகிய  பிரச்சனைகளை குணப்படுத்தும்.
உடல் வலுபெறும்.  எண்ணெய் குளியலுக்கு நாம் முக்கியமாக முதன் முதலில் நாம் பயன்படுத்த வேண்டியது எள்ளினால் உருவான நல்லெண்ணெய் ஆகும். நல்லெண்ணெய் இல்லை அல்லது கிடைக்கவில்லை என்றால் மற்ற எண்ணெய்கள் பயன்படுத்தலாம். 

எண்ணெயை உச்சி முதல்  பாதம்  வரை உடம்பெல்லாம் தேய்த்து அரைமணி நேரம் வெய்யிலில்  நிற்க வேண்டும். எண்ணெய் குளியலை பணி விழும் காலங்களில் பயன்படுத்தக் கூடாது.  மழை நாட்களில் எண்ணெய் தேய்து குளிக்க கூடாது.

உடல் சூடு குறையும் 

வெய்யிலில் எண்ணெய் தேய்து நிற்கும் பொழுது சூரியகதிர்களில் உள்ள புரோ விட்டமின் ‘டி’ஐ பெற்று, தோலில் படர்ந்து முழுமையான வைட்டமின்  ‘டி’ஆக மாறும். இதன் முலம் மேற்கூறிய அனைத்து வியாதிகளும் சரியாகும். 

எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் பகலில் தூங்க கூடாது, சோற்றுக்கற்றாலை சாப்பிடக்கூடாது, ஆண்பெண் இல்லற வாழ்வு செய்தல் முடி வெட்டக்கூடாது, பழைய சாதம் சப்பிடக் கூடாது  இவை அனைத்தும் உடலை குளிர்ச்சிப் படுத்தகூடியவை  ஆகும்.எண்ணெய் குளியலால் உடல் சூடு குறையும்  ஆதலால் அந்த நாள் மட்டும் உடலீல் சூடு உண்டாக்கும் வேலையை செய்யாமல் இருத்தல் நல்லது தரும்.

வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது எண்ணெய் தேய்து குளித்தல் சிறந்தது ஆகும். ஆண்கள் சனிக்கிழமையும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.     நல்லெண்ணெய் எள்ளினால் தயாரிக்கப்படுகின்றது. அதுவும் செக்கில் அறைக்கப்பட்ட நல்லெண்ணெய் குளியலை இந்த தீபாவளி முதல் தொடங்கி வாரம் இரு முறை என தொடர்ந்து குளித்து வரவும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *