Special of Tamil: தமிழ் மொழியின் சிறப்பும் அதன் பருவப் பெயர்களும்
தமிழ் மொழி என்றாலே என்றும் சிறப்புதான்.அதனை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அளவே இல்லை. உலகில் உள்ள அத்தனை மொழிகளுக்கும் துணை மொழி உள்ளது, ஆனால் தமிழ் ஒன்றே தனித்து நின்று செம்மொழியாக பல்லாயிரம் ஆண்டுகள் வலம் வந்து ஒன்று உள்ளது. இத்தகைய சிறப்புகள் மிக்க தமிழ் மொழிக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாகவும் பெருமையை எடுத்து கூறும் ஒன்றாக அதன் பருவப் பெயர்கள் அமைந்துள்ளது. பருவப் பெயர்களும் தமிழ் மொழியின் சிறப்பும் பற்றி அறிந்து கொள்வோம். ஒவ்வொரு வயதிற்கும் ஒவ்வொரு பருவம் உள்ளது அதிலும் ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.
ஆண்களின் பருவப் பெயர்கள்
🔥 7 வயதிற்கு கீழ் – பாலன்
🔥 10 வயதிற்கு கீழ் – மீளி
🔥 14 வயதிற்கு கீழ் – மறவோன்
🔥 14 வயதிற்கு மேல் – திறலோன்
🔥 18 வயதிற்கு கீழ் – காளை
🔥 30 வயதிற்கு கீழ் – விடலை
🔥 30 வயதிற்கு மேல் – முதுமகன்
மேலும் படிக்க : போட்டித் தேர்வுக்கான தமிழ் வினா விடைகள்
பெண்களின் பருவப்பெயர்கள்
🔥5 வயதிற்கு கீழ் – பேதை
🔥10 வயதிற்கு கீழ் – பெதும்பை
🔥16 வயதிற்கு கீழ் – மங்கை
🔥25 வயதிற்கு கீழ் – மடந்தை
🔥 30 வயதிற்கு கீழ் – அரிவை
🔥 35 வயதிற்கு கீழ் – தெரிவை
🔥 55 வயதிற்கு கீழ் – பேரிளம்பெண்
மேலும் படிக்க ; டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான தமிழ் வினா விடை