கண்ணதாசன் கவியில் கண்ணனின் குறும்பு
கண்ணா! கண்ணே! சாதாரணமா கொஞ்சர பேருல கூட இவரை கூப்பிட்டே இருக்கோம்ல.
நம்ம வீட்டு குட்டி பாப்பாக்கு முதல்ல போடற வேஷம் கிருஷ்ணர் வேஷம். ஆனால் குறும்பு செஞ்சா மட்டும் திட்றோம் கிருஷ்ணரா பார்த்துட்டு குறும்பு செய்யாம இருந்தா எப்படி!
கிருஷ்ணன் குறும்புக்காரன் லீலை செய்றவன் என் நிறைய சொல்லி கேள்விப்பட்டு இருக்கோம். கவிஞர் கண்ணதாசன் பாடலா பாடி கிருஷ்ணரை தாலாட்டுவது போல் நம்ம எல்லாரையும் கிருஷ்ணரோட மாய வலையில சிக்க வச்சிருக்காரு.
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
யாரா இருந்தாலும் ஒரு குழந்தை நம்மளோட கன்னத்து கிட்ட கன்னத்த வைச்சு கொஞ்சிப் பேசறது ஒரு அலாதியான அற்புதமான மகிழ்வான தருணம். வருங்கால மன்னனா இருக்கப்போறவன் சின்ன வயசுல மன்னனுக்கான லீலைகள் செய்யறதுல ஒண்ணும் தவறில்லையே!
அவன் எல்லா குறும்புகளையும் செஞ்சுட்டு தூங்குறதுக்குள்ள எல்லாருமே தூங்கிடு வாங்கப்பா. இதெல்லாம் நம்ம வீட்டிலையும் நிறைய பார்த்திருப்போம் நினைக்கிறேன்.
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ
அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
காளிங்க நர்த்தனம்! அந்த யமுனா ஆறுல நடந்தப்போ நம்ம வேறு ஒரு பிறவில இருந்திருப்போமானு தெரியல ஆனா இந்த வரிகள் நம்மள அந்த காட்சிய பார்க்கிற அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியது.
ஒரு குழந்தை தூங்கும் போது நமக்கெல்லாமே கொஞ்சனும்னு தோணுது. கோபியர்களால கிருஷ்ணர தூங்குவிடுவது சாத்தியமா!
அவன் பொன்னழகை காண்பதர்க்கும் போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவனோட அழகுக்கு மயங்காத ஆளே கிடையாது அந்த குழந்தை கிட்டடுறுந்து முத்தம் கிடைக்காதானு ஏங்காதவங்களே இல்லை. இப்படி சொல்லிட்டே போளாங்க.
அனைத்து அம்மாக்களும் யசோதாவாக மாறி தன் குழந்தை கிருஷ்ணர்களை தாலாட்டுப் பாடி தூங்க வைப்பது இந்த பாடலை விட வேறு எந்த பாடல் பொருந்தும்!