ஆன்மிகம்ஆலோசனை

ஸ்ரீ கந்த சஷ்டி திருவிழா: அறுபடை வீடு

“அறுபடை வீடு கொண்ட திருமுருகா…” முருகப் பெருமானுக்கு மட்டும் அமைகின்ற இந்த அறுபடை வீடு சிறப்பு வாய்ந்தது. அறுபடை வீடுகளின் பட்டியலை காண்பதோடு அதனின் தாத்பரியத்தையும் காண்போம்.

  • படைவீடின் பொருள் மற்றும் முருகப்பெருமானுக்கு இருக்கும் அறுபடைவீடு.
  • நக்கீரரின் திருமுருகாற்றுப்படை பற்றிய விளக்கம்.
  • திருமுருகாற்றுப்படை தோன்றக் காரணமாக இருக்கும் கதை.

படைவீடு என்றால் என்ன?

போருக்கு செல்லும் படை தங்குவதற்காக அப்படையின் தளபதி அமைக்கும் பாசறை/ஆயுத சாலை இடத்தை படை வீடு என குறிப்பிடுகின்றனர்.

முருகனுக்கு மட்டும் ஏன் படைவீடு?

முருகனை தேவசேனாதிபதி என்று அழைக்கிறோம். சேனாதிபதி பட்டத்துடன் இருக்கும் ஒரே கடவுள் எம்பெருமான் முருகன் தான் ஆகையால் இந்த தளபதிக்கு ஆறு படைவீடுகள்.

ஆற்றுப்படை என்றால் என்ன?

ஒருவன் துன்பத்தில் வாடிக் கொண்டிருக்கும் பொழுது அவனை ஆறுதல் படுத்தும் படி கூறும் வார்த்தையே ஆற்றுபடுத்துதல் என்று கூறப்படுகிறது.

எல்லா குறைகளையும் தீர்க்கும் முருகப்பெருமானை பற்றி நக்கீரர் பாடியதே திருமுருகாற்றுப்படை. இந்த நூலை நக்கீரர் மூலமாக முருகப்பெருமான் திருவிளையாடல் நிகழ்த்தி இயற்ற வைத்தார். அந்த கதை பார்ப்போம்.

முருகப்பெருமானின் திருவிளையாடல்

இரு பூதங்களை முருகப்பெருமான் நக்கீரரை சிறைபிடித்து வைக்குமாறு ஏவினார் அந்த பூதகணங்களும் அவர் நீராடும் குளத்தின் அருகில் வந்து காத்திருந்தது. தக்க சமயம் பார்த்து ஒரு இலையை மரத்திலிருந்து கில்லி தண்ணீரில் போட்டது. அந்த இலை ஒருபுறம் மீனாகும் மறுபுறம் பறவையாகவும் மாறி தண்ணீரின் உள்ளும் வானத்தை நோக்கி பறக்கும் தவித்தது. இதைக் கண்ட நக்கீரர் இரண்டையும் காக்கும் பொருட்டு இலையை கிள்ளினார். ஆனால் அந்த இரண்டும் இறந்தது. இதை சாக்காக கொண்டு அந்த பூதகணங்கள் இவரை சிறை பிடித்தது. அப்பொழுது நக்கீரர் திருமுருகாற்றுப் படையை ‘முதியோனே’ என்ற சொல்லிக்கொண்டு முடிக்க; முருகப்பெருமான் காட்சியளித்து ‘நான் முதியவன் ஆக சில பல காலங்கள் உள்ளது அப்போது வந்து உன்னை காப்பாற்றுகிறேன்’ என்று கூறி மறைந்தார். உடனே நக்கீரர் மற்றொரு பாடலை அந்த ஆற்றுபடையுடன் இணைத்து ‘இளையோனே’ என முடித்தார். முருகப்பெருமானும் காட்சியளித்து அவரை காப்பாற்றினார்.

அறுபடை வீடு

திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பாக 6 இடங்களை வரிசைப்படுத்தி கொடுத்துள்ளார். அந்த வரிசையிலேயே முருகனின் அறுபடை வீடுகள் அமைந்துள்ளது. அவை,

  1. திருப்பரங்குன்றம்
  2. திருச்செந்தூர்
  3. பழனி
  4. சுவாமிமலை
  5. திருத்தணி
  6. பழமுதிர்ச்சோலை

அறுபடை வீடுகளில் பரங்குன்றத்து இருந்து துவங்கி பழமுதிர்ச்சோலை வரை ஆறு நாட்களும் காண்போம்.

மேலும் படிக்க : மகாபலியை வரவேற்கும் ஓணம் திருநாள் பண்டிகை நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *