மக்களே உசார்! அச்சுருத்தும் இன்புளூயன்சா
நாட்டில் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல் பெருமளவில் மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ் வைரஸ் எச் 3 என்2 வகையை சேர்ந்த வைரஸ்கள் இளம் வயது குழந்தைகளை பாதிக்க உள்ளதாக மருத்துவ உலகம் எச்சரித்துள்ளது.
15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக அளவில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவின் 90 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தின் ஹெச்3என்2 வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுவதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அரியானா மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்புளுயன்சா வைரஸ் நாடு முழுவதும் அதிகரிக்கும் என்ற தகவல்கள் கிடைத்திருப்பதால் மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மாநில தலைமைச் செயலாளர் மூலம் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கொரோனா நோய்க்கு பின்பு தற்போது இன்ஃப்ளன்சா வைரஸ் நோய்கள் நாட்டின் சிறிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயிலிருந்து மக்கள் பாதிப்பை தடுக்க அரசு முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.