ஆன்மிகம்ஆலோசனை

தினமும் பயன்படுத்தக்கூடிய பயனுள்ள ஆன்மீகத் தகவல்கள்

குறிப்பாக பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறுவது கூடாது. அமாவாசை அன்று எண்ணை தேய்த்து குளிக்க வேண்டாம். வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.

இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் தவிர்த்தல் வேண்டும். கரண்டியால் மட்டுமே பரிமாற வேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

குழந்தைகளிடம், நோயாளிகளிடம் கோபத்தை காட்டுதல் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப் பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்து சேரும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும்.

அன்பு, உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும். எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது. சர்ச்சை செய்யாத, சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்வாள்.

பசு முதலியவற்றை தொடுவதும், நேர்மையாக இருப்பது, அடிக்கடி பெரியோர்களை தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது, செல்வத்தைக் கொடுக்கும். எந்தப் பொருளையும் இல்லை இல்லை எனக் கூறுதல் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும் பொருளும் சந்தோஷமும் பெருகும்.

எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ? அங்கு திருமகள் குடியிருப்பாள்.

எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி வைத்துக்கொள்ளுங்கள்.

வீட்டில் சண்டை சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசுதல் தவிர்க்க வேண்டும். மாலை 6 மணிக்கு திருவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். ஊனமுற்றவர்கள், ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்துவாருங்கள்.

விளக்கை தானாக மலையேற்ற கூடாது. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். விளக்குகள் அல்லது மழை ஏற்றுதல் என்று கூறவேண்டும். அணைப்பது என்ற வார்த்தையை உபயோகிக்க அமங்கள சொற்களாக கருதப்படுகிறது.

தினசரி விளக்கேற்றுவது வீட்டிற்கு சிறப்பு தரும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட விளக்குகளை ஏற்றுங்கள். காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில், கோபுரம் இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்ப்பதால் நன்மை சேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *