ஆன்மிகம்ஆலோசனை

வீட்டில் அமைதி செல்வம் இன்பம் பெற ஆன்மீக ரீதியாக சில நல்ல விஷயங்கள்

ஆன்மீக ரீதியாக சில நல்ல விஷயங்கள் நாம் செய்து வருவதால் வீட்டில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல விஷயங்களும் நிலைத்து நிற்கும். வீட்டில் நெல்லி மரம் வளர்ப்பதால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். லட்சுமி, குபேரருக்கு உரிய மரமாக நெல்லி திகழ்கிறது. தீய சக்திகளையும் அண்டவிடாது.

உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக. இதற்கு ராம நாமம் உச்சரிக்க வேண்டும். இந்த நாமத்தை உச்சரிக்கும் இடத்திற்கு அனுமன் தேடி வருவார். ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் குடியிருப்பாள்.

இல்லத்தில் காலை, மாலை வேளைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பகவான் பாடல்கள் ஒலிக்க விட வேண்டும். சஹஸ்ர நாமம் ஒலிக்கும் வீடுகளில் செல்வம் செழிப்பு தாமாகவே வந்து சேரும்.

வீட்டில் கிழிந்த ஆடை களை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது. உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது தரையில் சிந்தக்கூடாது. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டுவது கூடாது. என்ன எழவு, எழவு என்றும் பேசக்கூடாது. எரியும் குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது. ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தினால் மட்டுமே விளக்கை அணைக்க வேண்டும்.

இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் இவற்றை எடுத்துச் செல்ல அனுமதித்தல் கூடாது. வெற்றிலை, வாழையிழை, இவைகளை வாட விடக்கூடாது. வாசல் படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. செல்வம் நிலைக்க விருத்தி அடைய பணம் கொடுக்கல், வாங்கல் செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும்.

வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம். ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து கொடுக்க வாங்க வேண்டும்.

சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப் பூக்கள், சுத்தமான ஆடைகள், வீட்டில் இருப்பது விசேஷம். செல்வம் நிலைத்து நிற்க நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம். பசுக்கு ஒரு பழம் வாங்கி கொடுத்தால் கோடி புண்ணியம் தேடி வரும் என்று அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து பூசித்தால் பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான்.

கோமாதா பூஜை, குபேர பூஜைக்கு சமம் தினசரி துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி மூன்று முறை வலம் வருவது சிறப்பு. சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சல் குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை தீபம், இவை அனைத்தும் லட்சுமிக்கு மிகவும் பிடித்தமானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *