ஆன்மிகம்

வாழ்வின் பொருளை உணர்த்தும் விளக்கு ஒளி!

தீபம் மிகுந்த சக்திவாய்ந்த ஒளியிடம் ஆகும். தீபம் ஏற்றும் பொழுது, மங்களகரமான  ஒரு சக்தி, வீடு முழுவதும் நிறைந்திருக்கும் என கூறப்படுகின்றது. 

தீபம்  குறித்த பொருள் மற்றும் தீபம் என்றால் என்ன என்பதை  குறிந்து நாம் அறிந்து அதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் நம்மை சுற்றியுள்ள  இருள் விலகும். 

அகல் விளக்கு சூரியனை குறிக்கும், அதில் ஊற்றக்கூடிய எண்ணெய் திரவமானது சந்திரனை குறிக்கின்றது. அதில் போடப்படும் திரி மற்றும் அதில் எரியும் தீபமானது செவ்வாய் பகவானைக் குறிக்கின்றது. 

அகல் விளக்கில் எரியும் தீயின்  ஜூவாலையின் நிழல் கிழே விழும் பொழுது ராகுப் பகவானைக் குறிக்கும்.   மேலும் தீபசுடரின் நிறம் மஞ்சள் நிறமாக இருக்கும் இது குரு பகவானைக் குறிக்கின்றது. தீபம் எரிந்து அனையும் அதிலே கரி இருக்கும் அது சனீஸ்வர பகவானைக் குறிக்கும்.   அப்படி ஏற்றப்பட்ட தீபமானது இல்லம் அல்லது கோவில் முழுவதும்  பரவுவது கேது பகவானை குறிக்கும். 

தீபமானது எரிய எரிய எண்ணெய் குறைந்து வருகின்றதே அது ஆசை என்னும் சுக்கிர பகவானைக் குறிக்கும். 

தீபமானது ஆசை என்ற திரி எரிய எரிய நம்ம மோட்சத்திற்கு தடையாக இருக்கும்.  கருமம் ஆனது முத்தியடையச் செய்து மறுபடியும்  பிறப்பில்லா நிலையை அடைய அகல் தீபம் தத்துவத்தை உணர்த்துகின்றது. 

சம்பிரதாயம், சாஸ்திரம்

தீபத்தை வெறுமனே சம்பிரதாயம், சாஸ்திரம் பெரியவர்கள் கூற்று என ஏற்றுவதைவிட பொருள் புரிந்து  தீப ஒளியை ஏற்றுவது வாழ்வை ஏற்றமடையச் செய்யும். 

நம் முன்னோர்கள் அதற்காகவே தீபம் வீட்டில் வைக்க வேண்டும் தினமும் இரண்டு வேளை வீட்டில் ஏற்றினால் நல்லது என்று கூறியதிலுள்ள அர்த்தம் நமக்கு இப்பொழுது  விளங்கியிருக்கும் என நம்புகின்றோம். 

இனிமேல் நமக்கும் ஒளியின் மீது பற்றும், பிடிமானமும், அதிகரிக்கும். அதன் பின் ஆசை என்பது குறைந்து அளவான வாழ்வு  வாழ்வோம். இன்னும் தீபங்கள் குறித்து நிறைய நாம் வருகின்ற பதிவில் அறிவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *