ஆன்மிகம்ஆலோசனைதமிழகம்

நீண்ட நாள் திருமணத்தடை, பதவி உயர்வு ,நோய் தீர்க்கும் திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள்

வேண்டும் வரம் வழங்கும் சிறப்பு வாய்ந்த இத்திருத்தலம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்கண்ணமங்கலம் எனும் ஊரில் அமைந்துள்ளது. 108 திவ்யதேசங்களில் இருபத்தி ஏழாவது திவ்ய தேசமாக அமைந்துள்ளது. இத்தளத்தில் பக்தவச்சல பெருமாள் 16 அடி உயரத்தில் அனைவரும் தலை உயர்ந்து பார்த்து வணங்கும்படி நமக்கெல்லாம் காட்சி தருகிறார்.

ஊரின் பெயர் காரணம்

12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்ய பிரபந்தமாக நமக்கு எல்லாம் தொகுத்து வழங்கிய நாதமுனிகளின் மிகச்சிறந்த மாணவரான திருக்கண்ணமங்கை ஆண்டாள் எம்பெருமானை மணம் முடிக்க வேண்டி தவமிருந்த தலம் ஆதலால் திருக்கண்ணமங்கை என நாதமுனிகளின் மாணவர் பெயராலே இவ்வூர் அழைக்கப்படுகிறது.

ஸ்தல வரலாறு

பாற்கடலை கடைந்த போது மகாலட்சுமி தாயார் அவதரித்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பின்பு தாயார் பெருமாளை திருமணம் செய்ய விரும்பி எம்பெருமானை நோக்கி தவம் இருக்க நினைத்தாள். அவர் தவம் இருக்க திருக்கண்ணமங்கை தேர்ந்தெடுத்து தர்ஷன புஷ்கரணிக் கரையை அடைந்து தவமிருக்க தொடங்கினாள் தாயாரின் தவத்தில் மனம் மகிழ்ந்த பெருமாள் உத்பலாவதகம் என்னும் வாகனத்தில் திருக்கண்ணமங்கை கரைக்கு வந்தார். பின்புதான் வந்துள்ள செய்தியை ஓலையில் எழுதி அனுப்பினார் அதைப் படித்தவுடன் வெட்கத்தில் சிவந்த மகாலட்சுமி தாயார் உடனே பெருமாளை நோக்கி சென்றார் .பின்பு முப்பத்து முக்கோடி தேவர்களும் மகாலட்சுமி தாயாரை தர்ஷன புஷ்கரணி தீர்த்தத்தில் அபிஷேகம் செய்து அனைவரின் ஆசியுடன் எம்பெருமான் மற்றும் மகாலட்சுமி தாயாரின் திருமணம் இனிதே கோலாகலமாக நடந்தது .

தேவர்கள் தர்ஷன புஷ்கரணி தீர்த்தத்தில் அபிஷேகம் செய்ததால் தாயார் அபிஷகவல்லி என்றும் ஒரு பக்தனின் தவத்தை ஏற்று மெய்சிலிர்த்து திருமணம் செய்து கொண்டதால் பெருமாள் பக்தவச்சல பெருமாள் என்றும் அழைக்கப்பட்டனர்.

கோவிலின் சிறப்புகள்

பொதுவாக பெருமாளின் ஆலயங்களில் ஏழு விஷயங்கள் சிறப்பாக அமையப் பெற்றிருக்க வேண்டும் என்பது ஐதிகம். அவ்வாறு இக்கோவிலின் சிறப்பாக விமானம், மண்டபம் ,அரண்யம், தீர்த்தம், ஆறு , நகரம் ஆகிய ஏழு லட்சணங்களும் சிறப்பாக அமைந்துள்ள திருத்தலமாக விளங்குவதால் ஸப்தாமிருதஷேத்திரம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

விமானம் – உத்பலாவதக விமானம்

மண்டபம் – வேத மண்டபம்

அரண்யம் – கிருஷ்ணாரண்யம்

ஷேத்திரம் – கிருஷ்ண மங்கள் ஷேத்திரம்

தீர்த்தம் – தர்சன புஷ்கரணி

ஆறு – விருத்த காவேரி எனப்படும் வெட்டாறு

நகரம் – கண்ணமங்கை மாநகர்

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த திருத்தலத்தில் பக்தவச்சலப் பெருமாள் நித்தம் கல்யாண கோலத்தில் காட்சி தருவதால் நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும். மகாலட்சுமி தாயாரை தேவர்கள் பட்டாபிஷேகம் செய்த தர்ஷன புஷ்கரணி தீர்த்தத்தை தரிசனம் செய்வதால் சகல நோய்களும் நீங்கி நலமாக வாழலாம். இத்திருத்தலத்திற்கு சென்று வர அனைத்து விதமான பாவங்களும் நீங்கி பதவி உயர்வு கிடைக்கும்.

இத்தனை அழகான சிறப்பு வாய்ந்த திருக்கண்ணமங்கை பக்தவச்சலப் பெருமாளை வழிபட்டு அனைவரும் வாழ்வில் சிறக்க வாழ்த்துக்கள்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *