சென்னையின் வழிபாட்டுத் தலங்களின் சிறப்புக்கள்!
கபாலீஸ்வரர் கோவில்:
சென்னையின் திருத்தலங்களில் மிக முக்கியமானது கபாலீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயமாக விளங்குகின்றது.
இங்கு சிவனை வழிபடுவதற்காக பார்வதி மயில் உருவம் எடுத்த காரணத்தினால் மயிலாப்பூர் என்ற பெயர் வந்ததாக ஒரு வரலாறு உள்ளது. மேலும் திருஞானசம்பந்தர் இழந்த ஒரு உயிரை உயிர்ப்பிக்க வேண்டி இந்த ஆலயத்திற்கு வந்து பாடல் பாடி குழந்தையை உயிர்ப்பித்ததாக வரலாறு உண்டு. ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 நாட்கள் நடைபெறும். பத்தாவது நாள் அறுபத்துமூன்று கலைகள் கொண்ட சிறப்பு விழா சிறப்பாகக் வருகின்றது.
அமைவிடம்: மயிலாப்பூர், சென்னை 600004.
அஷ்டலட்சுமி கோவில்:
சென்னையின் எலியட்ஸ் கடற்கரையொட்டி அமைந்துள்ளது, இந்த அஷ்டலட்சுமி திருக்கோயில். இத்திருக்கோயிலில் மகாலட்சுமி எட்டு வகையாக காட்சியளிப்பது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். கோவிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை இக்கோவிலில் உள்ள சிலைகளை வழிபட்டால் தனது வீட்டிற்கு வந்து சேரும் என்று நம்பி வழிபாடுகள் இங்கு நடத்தப்படுகின்றன. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக நவராத்திரி திருவிழா இங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அப்போது அங்குள்ள பக்தர்கள் இறைவழிபாட்டுடன், எலியட்ஸ் கடற்கரையின் அழகையும் கண்டு ரசிக்கலாம். சென்னையின் கடற்கறையையொட்டிய 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இத் திருக்கோயில்.
அமைவிடம் : எலியட்ஸ் கடற்கரை, சென்னை 600090.
ஸ்ரீ வடபழனி ஆண்டவர் திருக்கோயில்:
சென்னை வட பழனியில் அமைந்துள்ளது இந்த முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மறுபதிப்பாக விளங்குகிறது. இக்கோயில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடனும் ஆறுமுக அவதாரத்துடனும், சந்தனகாப்பு அலங்காரங்கள் போன்ற பல ரூபங்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
தென்னிந்தியக் கோயில் கலை சிற்ப திறமைக்கு இங்குள்ள அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இந்திய திருக்கோயில் தமிழகத்தின் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும், இந்த ஸ்ரீ வடபழநி ஆண்டவர் திருக்கோயில்.
அமைவிடம்: வடபழனி, சென்னை 600026.
மாங்காடு:
சென்னை புறநகர் பகுதியில் மாங்காடு என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த காமாட்சி அம்மன் திருக்கோயில். பராசக்தி இக்கோயிலின் மூல தெய்வம் ஆவார். பெண் தெய்வ வழிபாட்டு கோயில்களில் மாங்காடு கோயில் மிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பேபி காமாட்சியம்மன் தரிசனத்தையொட்டி நோன்பு மேற்கொண்டு அங்க பிரதேசம் அடிப்பிரதட்சணம் செய்து வழிபடும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புகழ்மிக்க மாங்காடு கோவில் தமிழ் நாட்டின் மிக முக்கிய ஆலயங்களில் ஒன்று ஆகும்.
அமைவிடம்: மாங்காடு, சென்னை 602101.
ஸ்ரீ பார்த்தசாரதி கோயில்:
திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள இந்த பார்த்தசாரதி கோயில் இந்து மதத்தின் உட்பிரிவு பெரியோர்களால் சிறப்பு பெற்று புகழ் பெற்றதாகும்.
தென்னிந்தியா கோயில் கலை திறமைக்கு இக்கோயில் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். மகாவிஷ்ணுவின் வெவ்வேறு அவதார வடிவங்களை இத்திருக்கோயில் தளத்தில் காணலாம். இங்கு யானை கோயில் பூஜையில் பங்கேற்கும் நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஆகும்.
அமைவிடம்: திருவல்லிக்கேணி, சென்னை 600005.
திருக்கழுக்குன்றம்:
சென்னை மாமல்லபுரத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் வேதகிரீஸ்வரர், தாயார் திரிபுரிசுந்தரி ஆவார். தலமரமாக வாழை மரமும், தீர்த்தமாக சங்குத்தீர்த்தம் சிறப்பு பெற்றுள்ளன. இக்குன்று கோயிலில் தினமும் இரண்டு கழுகுகள் இறை உண்ணுவதற்காக வருகின்றன. கலை அழகு மிகுந்த இத்திருக்கோயிலை தரிசிக்க தினமும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
குன்றத்தூர் கோயில்:
சென்னை போரூரில் இருந்து தென்கிழக்குப் பகுதியில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இவ்வூரில் வாழ்ந்த சேக்கிழார் நாகேஸ்வரர் கோயிலை கட்டினார். திருவல்லீஸ்வரர் மூலவராக கொண்ட ஒரு சிவாலயமும் உள்ளது. இப்புனித இடம் குன்றத்தூர் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சேக்கிழார் பெருமானின் ஊர். இவர் சிறந்த சிவ பக்தர். இவர் எழுதிய பெரிய புராணம் சிறந்த பக்தி இலக்கியம் ஆகும்.