தமிழகத்திற்கு மத்திய குழு வருகை நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய முடிவு
நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் திங்கட்கிழமை மத்திய குழு தமிழகம் வருகின்றது. இக்குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்திற்கு தேவையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
- புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் பல மாவட்டங்களில் விவசாய நிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தின.
- தமிழக முதல்வர் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு சென்றார்.
- மத்திய குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தேவையான உதவிகள் கிடைக்கும்.
மத்திய குழுவின் அறிக்கை
இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் பெரும் அளவில் இருப்பதால் 25, 26ம் தேதிகளில் மத்திய குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தேவையான உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
முதல்வர் பார்வையிட்டு சென்றார்
கடந்த 25ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய நிவர் புயல். கடலூர் உள்பட பல மாவட்டங்களில் விவசாய நிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தின. மறுநாள் தமிழக முதல்வர் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு சென்றார்.
புதுச்சேரியில் மத்திய குழு ஆய்வு நடத்தப்படவுள்ளன. புயல் குறித்து முதல்வரை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய குழு செய்யும் என்று குறிப்பிட்டிருந்தார்.