ஆரோக்கியம்சமையல் குறிப்புவாழ்வியல்

ஆயுத பூஜை ஸ்பெஷல் டேஸ்டி சேமியா பாயசம்..

பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்ற பழமொழி உண்டு ..அதே போல் பாயாசத்தை பார்த்தால் படையே மயங்கும் என்று கூறும் அளவிற்கு பாயாசத்திற்கு உலகமே அடிமை.. நமது பாரம்பரிய உணவில் முக்கியமாக ஒரு உணவாக பாயசம் உள்ளது உறவினர்களுக்கு விருந்து வைத்தால் வடை பாயாசத்தோடு விருந்து வைக்க வேண்டும் என்பதன் கூறுவார்கள் அதே போல் தெய்வத்திற்கு பிரசாதமாக படைகளில் பாயாசம் வைத்து கும்பிடுவது வழக்கம்… விருந்து என்றாலே அதில் பாயாசம் முக்கிய இடம் பெறும் இது மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த உணவை விரும்பி சாப்பிடுவர் இதிலும் நிறைய வகைகள் உண்டு ஒவ்வொருவரும் அனைத்தையும் விரும்பி கொண்டு மகிழ்வர் இத்தகைய சுவை மிகுந்த பாயாசத்தை ஒரு பண்டிகை நாளில் நீங்களும் செய்து தெய்வத்திற்கு படைத்து வந்துவிட்டால் மிகவும் நல்லது இப்பொழுது ஆயுத பூஜை உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவரும் தங்களது சக்திற்கு தகுந்தாற்போல் ஆயுத பூஜையை கொண்டாடுவர்.. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் மிகவும் ஆரோக்கியமான சுவை மிகுந்த பாயாசத்தை நீங்களும் செய்து மகிழ்வீர்..

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – 150 கிராம்

பால் – 1 கப்

சேமியா – 50 கிராம்

முந்திரி – 20

நெய் – 2 டீஸ்பூன்

சர்க்கரை – 150 கிராம்

செய்முறை

முதலில் ஒரு கடாயில் ஒரு கப் பால் சேர்த்து அது தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்பு அதில் 150 கிராம் ஜவ்வரிசியை சேர்த்து ஒரு 20 நிமிடம் அடுப்பில் வேக வைக்க வேண்டும். ஜவ்வரிசி நன்றாக வேகம் வரை அவ்வப்போது கிளறி கொள்ளவும்.

பின்பு வேறு ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி நாம் எடுத்து வைத்த 20 முந்திரியை இரண்டு துண்டுகளாக வெட்டி நெயில் போட்டு நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அதை கடாயில் மீண்டும் ஒரு டீஸ்பூன் அளவு அல்லது இரண்டு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி அதில் நாம் வாங்கி வைத்த 50 கிராம் சேமியாவை சேர்த்து நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். சேமியா பொன்னிறமாக வரும் வரை படுக்க வேண்டும் இப்பொழுது ஜவ்வரிசி நன்றாக வெந்திருக்கும் அதில் நாம் வறுத்து வைத்த முந்திரி மற்றும் சேமியாவை சேர்த்து நன்றாக கிளறவும் பின்பு அதில் மெதுவாக நூற்று ஐம்பது கிராம் சர்க்கரையை சேர்த்து கிளற வேண்டும் சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு மீண்டும் ஒருமுறை கிளறி கொள்ளவும் அவ்வளவுதான் சூடான சுவையான மிகவும் ஆரோக்கியமான ஜவ்வரிசி பாயாசம் ரெடி…

இதனை நீங்கள் ஆயுத பூஜை அன்று சாமிக்கு படையல் ஆக வைத்து கும்பிட்டாலே போதுமானது சாமியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக வந்து சேரும்.. நீங்கள் குடும்பத்துடன் அமர்ந்து இதனை சாப்பிட்டு மகிழுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *