விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பூரணம் கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்தி என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை தான். விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது கொழுக்கட்டை. கொழுக்கட்டையில் பலவிதம் உள்ளன. கோதுமை மாவு பிடி கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை, உப்புக் கொழுக்கட்டை என்று இருந்தாலும், மோதக கொழுக்கட்டை அதாவது பூரண கொழுக்கட்டை இது மிகவும் ஸ்பெஷல்.
கொழுக்கட்டையின் மேலே இருக்கும் மாவுப் பொருள் தான் அண்டம். இனிப்பான பூரணம் தான் பிரம்மம். உலக வாழ்க்கை பற்றற்று கடந்து சென்றால் இனிப்பான கடவுளை அடையலாம் என்ற தத்துவத்தை விளக்குவதற்காக இந்தக் கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தியில் வைக்கப்படுகிறது. அந்த வகையில் சுவையான மோதக கொழுக்கட்டை எப்படி செய்வது பார்க்கலாம்.
பூரணம் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள் : பச்சரிசி 200 கிராம், புழுங்கல் அரிசி 200 கிராம், மண்டை வெல்லம் 100 கிராம், ஏலக்காய் 3, தேங்காய் அரை மூடி, உப்பு கால் ஸ்பூன்.
செய்முறை : முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் நன்கு ஊற வைத்து தண்ணீரை வடித்து ஒரு துணியில் காய விடவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து மிக்ஸியில் நன்றாக இடித்துக் கொண்டு பின் அடி கனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து வறுத்தெடுக்கவும்.
ஈரப்பதம் நீங்கி உலர்ந்தவுடன் வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும். பின் வறுத்த மாவு சல்லடையில் போட்டு சலித்து கொழுக்கட்டை மாவு தயாரித்து எடுத்து வைக்கவும்.
தேங்காயை துருவி, வெல்லத்தை பொடியாக்கி, பாசிப்பயறை வேக வைத்து தேங்காய் துருவல், வெல்லம், பாசிப்பயிறு அனைத்தையும் ஒன்றாக கிளறி நெய் விட்டு இறக்கவும்.
இந்த கலவையை ஆற விட்டு சிறு உருண்டைகளாக எடுத்து வைக்கவும். கொழுக்கட்டை மாவு கலந்து சூடான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி மாவினை சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்டி எடுத்து, எலுமிச்சை அளவு மாவை உருட்டி கிண்ணம் போல் செய்து அதில் பூரணத்தை வைத்து மூடி விடவும்.
கொழுக்கட்டை மாவு மற்றும் பூரணத்தை வைத்து எடுக்கலாம். கொழுக்கட்டைகளை திரட்டும் போது பூரண கலவை வெளியே வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக எல்லா மாவையும் கொழுக்கட்டைகளாக தயார் செய்து.
பின்னர் இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடானதும், அதில் கொழுக்கட்டைகளை தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து இறக்க வேண்டும். மணமான சுவையான விநாயகர் சதுர்த்தி பூரணம் கொழுக்கட்டை தயார்.