ஆரோக்கியம்சமையல் குறிப்புயூடியூபெர்ஸ்வாழ்க்கை முறை

ஸ்பெஷல் இடித்து அரைத்த மீன் வருவல்

மீன் என்ற வார்த்தையை கூறினாலே பல பேருக்கும் நாவில் எச்சில் ஊறும். மீனின் ருசிக்கு அடிமையாகாத ஆட்களே இருக்க முடியாது. மீன் என்பது ருசிக்காக மட்டும் சாப்பிடும் உணவு அல்ல அது மிக மிக சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவாகும் மீன் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய உணவு அது மட்டுமல்லாமல் அனைவருக்கும் உண்ணக்கூடிய வகையில் எளிதில் செரிமானமாக கூடிய உணவாகும்.

மீனின் பயன்கள் ஏராளம் உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர கண்பார்வை அதிகரிக்கும் உடலில் உள்ள வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்படும் மேலும் உடலுக்கு தேவையான விட்டமின் சத்துக்கள் இதில் நிறைந்து உள்ளது. இத்தனை ருசியும் ஆரோக்கியமும் நிறைந்த உணவான மீனை விதவிதமாக செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் அதுவும் வீட்டிலேயே நீங்கள் எளிய முறையில் செய்து சாப்பிட முடியும் என்றால் அதைவிட சிறந்தது எதுவாக இருக்க முடியும் இதுவரை மீன் வறுவல் பலவற்றை பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த முறை ஒரு புது விதமான மிக எளிதான மீன் வருவல் எப்படி செய்யலாம் என்று பின்வருமாறு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மீன் – 1/2 கிலோ

சிறிய வெங்காயம் – 6

மல்லி – 1/2 டீஸ்பூன்

சோம்பு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

மிளகு – 1 டீஸ்பூன்

வர மிளகாய் – 10

இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு

எலுமிச்சை – 1

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் ஐந்து அல்லது ஆறு சிறிய வெங்காயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் அளவு சோம்பு, சீரகம் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு மிளகு மற்றும் பத்து வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ஓரளவு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.மேலும் நாம் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கி விடவும். மீன் வருவளுக்கு தேவையான மசாலா இப்பொழுது ரெடியாகி விட்டது நாம் ரெடி பண்ணி வைத்த மசாலாவில் மீன் துண்டுகளை போட்டு நன்றாக கலக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். கலக்கும்போது அரை எலுமிச்சம் பழம் சேர்த்து பிரட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் மசாலாவில் கலக்கிய மீன் துண்டுகளை ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மசாலா கலந்து மீன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மொறு மொறு இடித்து அரைத்த சுவையான மீன் வறுவல் ரெடி.இதனை மனதார ரசித்து ருசித்து சாப்பிடுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *