ஸ்பெஷல் ரோஜா ரெசிபி..!!
ரோஜா அழகுக்கு மட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ரோஜா. இதன் இதழ்களை வைத்து வித்தியாசமான ரெசிபி பார்க்கலாம் வாங்க.
ரோஜா நட்ஸ் ரைஸ்
தேவையானவை : சிவப்பு ரோஜா இதழ்கள் அல்லது பன்னீர் ரோஜா இதழ்கள், அரை கப் பாதாம், முந்திரி தலா தோல் நீக்கிய வேர்க்கடலை வறுத்தது 25 கிராம், பிஸ்தா 8, ஏலக்காய்-2, பட்டை, இலவங்கம் சிறிதளவு. சில்லி பிளேக் அரை ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் கால் கப், பூண்டு 5 பல், பாஸ்மதி ரைஸ் கால் கிலோ சாதமாக வடித்து ஆற வைக்கவும். நெய் 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை : வாணலியில் நெய் விட்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து இதனுடன், வெங்காயம், பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி, அதில் ரோஜா இதழ்களைப் பொடியாக நறுக்கிப் போடவும். பிறகு துருவிய முந்திரி, பாதாம், வேர்கடலை, பிஸ்தா, சில்லி பிளேக், சேர்த்து கிளறவும். பின்னர் ஆறிய சாதத்தில் கலந்து நெய் விட்டு கிளறி எடுத்தால், சுவையான ரோஜா நட்ஸ் ரைஸ் தயார்.
கோடையில் ஏற்படும் வெப்பத்தினால் வரும் தோல் பிரச்னை தீர்க்க இந்த ஜூஸ் பருகலாம்.
ரோஜா பூ மில்க் ஷேக்
ரோஜா இதழ் அல்லது பன்னீர் ரோஜா இதழ் அரை கப், பால், சர்க்கரை 25 கிராம், துருவிய பாதாம், முந்திரி, கால் கப், பாதாம் பிசின் ஒரு ஸ்பூன் ஊற வைத்தது, ஐஸ்கட்டி 4, பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்த பாலை, சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் ஊறிய பாதாம் பிசின் சேர்த்து, பால் சிறிது விட்டு நைசாக அரைத்து எடுக்கவும். மீதமுள்ள பாலில் இந்த கலவையை கலந்து, துருவிய பாதாம், முந்திரி சேர்த்தால் ஜூஸ் டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும். கோடைக்கு ஏற்ற குளிர்பானமாக இது இருக்கும்.
கோடையில் பூக்களின் விலை மலிவாக இருக்கும் என்பதால் இதை அடிக்கடி செய்து கொடுக்கலாம்.