சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ரவா பொங்கல்

பொங்கல் அன்று பச்சரிசி வைத்து பொங்கல் இடுவது சிறப்பு. பொங்கலில் பல விதம் உண்டு. கல்கண்டு பொங்கல், சர்க்கரைப் பொங்கல், ரவா பொங்கல், தினைப் பொங்கல், வெண்பொங்கல் போன்ற பொங்கல் வகைகள் உள்ளன. ரவையை வைத்து உடனடியாக தயாரிப்பது ரவா பொங்கல். எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.

ரவா பொங்கல்

தேவையான பொருட்கள்

ரவை 100 கிராம், பாசிப்பருப்பு 50 கிராம், பால் கால் லிட்டர், இளநீர் 100 மில்லி, நெய் 3 ஸ்பூன், உப்பு கால் ஸ்பூன், முந்திரி 15, மிளகு-10, சீரகம் ஒரு தேக்கரண்டி, இஞ்சி பேஸ்ட் கால் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது பச்சை மிளகாய் 2.

செய்முறை விளக்கம்

வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் ரவையை மிதமான தீயில் வறுத்தெடுக்கவும். ரவையை மாற்றிவிட்டு அதே வாணலியில் நெய் ஊற்றி பாசிப்பருப்பு பச்சை வாசம் போகும் வரை வறுத்து எடுத்து விடவும். பாசிப்பருப்பை மாற்றிவிட்டு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, உடைத்த முந்திரி ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.

கடைசியாக மிளகு, சீரகம் பால், இளநீர் சேர்த்துக் கொதிக்கவைத்து பாசிப்பருப்பு போட்டு விட்டு சிறிது நேரம் வேக விடவும். நன்றாக வெந்ததும் கடைசியாக வறுத்த ரவையை சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடங்கள் மூடி போட்டு வேகவிடவும். கடைசியாக சிறிது நெய் விட்டு கிளறி இறக்கினால் ரவா பொங்கல் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *