ஆடி கடைசி வெள்ளி பெண்களின் சிறப்பு வழிபாடு
ஆடி மாதத்தில் தான் அன்னை எனும் மகா சக்தி பிரபஞ்சம் முழுவதும் பரவி அருள் பாலிக்க காத்திருக்கிறது என்று புராணங்களில் கூறப்படுகிறது. ஆடி வெள்ளி அன்று பெண்கள் விரதம் இருப்பது நன்மை பயக்கும். ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு திருவிழா கோலாகலமான விழாக்கள் நடக்கும். தினமும் அபிஷேகங்கள் செய்து விசேஷ பூஜைகள் செய்வார்கள்.
ஆலயங்களில் சில கோவில்களில் பூச்சொரிதல், கூல் வார்த்தல் வைபவம் நடைபெறும். ஆடி வெள்ளியன்று பெண்கள் வீட்டில் சிறப்பு பூஜைகளும் கோவில்களில் சிறப்பு கூட்டு வழிபாடுகளும் நடத்துவார்கள். மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களிலும் கருமாரியம்மன். முத்துமாரியம்மன் கோவில்களில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை திருவிழா கொடியேற்றத்துடன் நடக்கும்.
ஆடி மாதம் பிறந்தது முதலே பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை தரிசனம் செய்து மாதம் முழுவதும் வழிபடுவார்கள். காளியம்மன் கோவில்களில் அக்னிசட்டி எடுப்பது, மாவிளக்கு ஏற்றுவது, பொங்கல் வைப்பது, காதுகுத்து, விளக்கு போட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்வது போன்றவை நடைபெறும். அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ஏராளமான பெண்கள் குங்கும அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்வார்கள். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் பூஜைகளும் நடைபெறும். ஆடிவெள்ளியில் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றினால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
ஏராளமான பக்தர்கள் புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவார்கள். முப்பெரும் தேவிகளுக்கும் ஆடி வெள்ளிகளில் முதல் மூன்று வாரங்கள் பூ அலங்காரமும், நான்காவது வாரம் காய்கறி அலங்காரமும், ஐந்தாவது வாரம் பழ அலங்காரமும் செய்வார்கள். ஆடி மாதத்தில்தான் அன்னை எனும் மகா சக்தி பிரபஞ்சம் முழுவதும் பரவி அருள்பாலிக்கிறார்.