ஆன்மிகம்

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தைப்பூசம் ஸ்பெஷல்

இன்று தைபூசம் உலகமுள்ள முருகன்  கோவில்களில் அதிபிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளை  உலகத்திலுள்ள அனைத்து முருக  பக்தர்களும் மனம் உருகி வழிபடுவார்கள்.  தைபூச நன்நாளில் மக்கள் தங்கள்  அதிகாலை எழுந்து  குளித்து முடித்து பூஜை செய்து வழிபாடு செய்வார்கள்.

தைபூச நாட்களுக்காக காத்திருக்கும் பக்தர்கள் நடையாக பழனிக்கு செல்வார்கள், பால் குடம் மற்றும் காவிடி எடுத்து வணங்குவது வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நாளில்  முருகனை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும்.  மனம்  மகிழ்ச்சி பெறும்.

பழநி மலை முருகன் பற்றிய நாம் அறிய வேண்டிய தகவல்கள் இங்கு  கொடுத்துள்ளோம்.   பழநி மலை முருகனை தரிசனம் செய்யலாம் ஆண்டி கோலம் ஞானம் தரும் ஒன்றாகும். மக்களிடையே ஆண்டி கோலம் பார்ப்பது  ஆபத்து என்ற எண்ணம் இருக்கின்றது. அது அப்படியில்லை ஆண்டி கோலம் ஞானம் தரக்கூடியது ஆகும். 

தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. இதுவும் சக்திவாய்நது ஆகும்.  நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய நான்கு அபிசேகம் செய்யப்படுகின்றது.

 மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது. இவற்றில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. 

அதாவது முருக பெருமானின் முடி முதல், பிறகு அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான் செய்யப்படுகின்றது.

முருக பெருமானுக்கு சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம். அதற்காக பக்தர்கள் பெற விரும்புவார்கள்.

பழநியில் முருகப் பெருமானுக்கு ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. பழநியில் முருகனுக்கு  அபிசேகங்கள் ஐந்து முதல் 7 நிமிடங்களில் முடிகின்றது என்பதுதான் சிறப்பாகும்.  அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.  பழநியில் இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.

விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும்.  முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர்.  நவபாசன உருவாக்க முருகர் என்பதால் பழநியில் முருகருக்கு என சிறப்புத் தன்மை உள்ளது. அதன் பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

பழநி முருகர் தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும்.  எனவே இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இது சிறப்பு வாய்ந்தது ஆகும்.  விகரகத்தில் இருந்து வெளியாகும் நீரானது அபிஷேக தீர்த்ததுடன் கலந்து,காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்து வருகிறார்கள்.

பழநி தண்டாயுதபாணி

பழநி தண்டாயுதபாணி முருகர்  சிலையை சுற்றி  இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத ஒரு வித  மணம் பரவி நிற்கும். அது சுகந்தமாக இருக்கும்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிப்பது என்பது பெரும் வரம் ஆகும். மரகத லிங்கத்தை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிப்பது கடினமாகும்.

பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் .இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு  தகவல்கள் கூறுகின்றனர். 

அலங்காரங்கள் விளக்கங்கள்:

தண்டாயுதபாணி சிலையை இராஜ அலங்காரத்தில் தரிசிக்க வேண்டுமா? ஆண்டி கோலத்தில்

(கற்சிலை) தரிசிக்க வேண்டுமா? 

எது ‌சிற‌ந்தது? என்ற கேள்விகள் அனைவருள்ளும் எழுகின்றன. ராஜா அழங்காரம், ஆண்டி அலங்காரம் இரண்டுமே நன்மை தரக்கூடியவை அவை  குறித்து எந்த ஐயமும் அவசியமும் இல்லை.

 பழனியில் முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பது முன்னோர்கள் வாக்காகும். பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள். அதன் தார்பரியம் புரிந்து செயல்படுங்கள்.

பழநி முருகரின் ஆண்டி கோலத்தை முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தை விரும்பி பார்க்கலாம்.

வழக்குகளெல்லாம் நடக்கிறது, தீராத நோய்களெல்லாம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளுக்கு அலங்காரம் இல்லாத முருகனை வணங்குதல் நன்று என்று சொல்லப்படுகின்றது.  வழக்குகாக 20 வருடமாக வாதாடிக் கொண்டிருக்கிறேன். தீர்ப்பு தள்ளி தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகன் வழிகாட்டுவார் என்ற வழக்கும் உள்ளது.

தீராத நோய்,என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள், அவ்வளவுதான் என்ற நிலையில் அதற்கும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம். நக்கது நடக்கும்.

மன குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபடச் சொல்லலாம். அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. வாழ்வில் வழி கிடைக்கும்.

பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச்சல் உள்ளவர்கள் இவர்களெல்லாம் ஆண்டி கோலத்தைப் பார்த்தால் ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மனதிற்குள் பாயும். வாழ்க்கை பாதை தெளிவடையும். 

ராஜ அலங்காரம்:

பெண்ணிற்கு கல்யாணம் முடிக்கப் போகிறோம், பத்திரிக்கை அடித்து கும்பிடப் போகிறோம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு சாமி கும்பிடப் போகிறோம் ஆகிய இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.

நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்கார தரிசனம் என்பது வழக்கமாக  சொல்கிறார்கள்.

நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம் ஆகும். கந்தனின் அருள் வழிகாட்டுதலும் கிடைத்தால் காட்டையும் கடக்கலாம். சமுத்திரத்தை சரிசமமாய் நோக்கலாம்.

பால் குடம், காவடிகள்: 

முருகருக்கு கொண்டாடப்படும் சக்திவாய்ந்த இந்த நன்நாளில் நாம் அவரை வணங்கி அருள் பெறலாம். தை பௌர்ணமியான இன்று  முருகருக்கு உகந்த பூசம் கொண்டாட்டத்தில் பக்தர்கள் பால் குடம் எடுத்து,  காவடியுடன் கொண்டாடுவார்கள்.  கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என காவடிகள் பல விதங்களில் எடுக்கப்படுகின்றன. அவ்வாறே பால்குடம் பக்தர்கள் சுமந்து முருகரைப் போற்றுவார்கள் ஞானம், நல்ல அருளும் ஒரு சேர கிடைக்கும் இந்நாளை அனைவரும் பயன்படுத்தி வரவும். 

One thought on “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தைப்பூசம் ஸ்பெஷல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *