ஆன்மிகம்

அள்ளித்தரும் ஆடிக் கிருத்திகையை..!!

ஆடிமாதம் என்றாலே சிறப்பு மிகுந்த அம்மனுக்கு உரிய மாதமாக கருதப்படுகின்றது. ஆடி மாதம் முழுவதும் காலை எழுந்து குளித்து பூஜை செய்தல் சிறப்பானதாகும். ஆடிமாதத்தில்   செவ்வாய், வெள்ளியில் அம்மனுக்கு சிறப்பு  பூஜை மற்றும் அழங்காரங்கள் செய்யப்பட்டு மக்கள் கொண்டாடுவார்கள்.

ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்கள் வருகின்றன. ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அம்மாவாசை, ஆடி தபசு, ஆடி கீர்த்திகை ஆடி பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன. இந்த விழாக்களில் விரதங்கள்  பெரும்பான்மையான மக்கள்  தங்கள்  சிறப்பு வேண்டுதல்களை முன்வைத்து கடைப்பிடிக்கின்றனர்.

 சிறப்பு வழிபாடு

ஆடி மாதம் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த கடக ராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவனின் அம்சமான சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சரிப்பதால், இந்த மாதத்தில் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. ஆகையால் ஆடி மாதம் சக்தியின் மாதமாக அழைக்கப்படுகின்றது.

 ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து பூஜித்து வருகின்றோம். இதற்கு அறிவியல் பூர்வமான காரணங்களும் உள்ளன. இந்த மாதத்தில் கோடைக்காலம் முடிந்து பருவமழை வருவதால் பூவியில் ஏற்படும் வெப்பத்தை குறைக்க  கூழ் அம்மனுக்கு படைத்து உண்டு வந்தால் உடல் நலம்பெறும் சீரான வெப்பநிலையை உடலில் நிலைத்திருக்கச் செய்யலாம்.

ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்களும் வருகின்றன. ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அமாவாசை, ஆடி தபசு, ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.

ஆடி கிருத்திகை:

மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. இந்த வருடத்திற்கான ஆடி கிருத்திகை, ஆடி மாதம் 10-ம் தேதி ( 26 ஜூலை 2019) அன்று வருகிறது. இது முருகனுக்கு உகந்த தினம். முருகனை இந்த நாளில் வழிபாடு செய்வது நல்லது.

ஆடி கிருத்திக்கையில் அதிகாலை எழுந்து 4 மணிக்கு குளித்து முடித்து நாள் முழுவதும் கந்தனை நினைத்துப் போற்றி கவசம் பாடி வரலாம்.  முருகன் திருநாமம் பாடலாம். நாள் முழுவதும் விரதம் இருந்து கோவில் சென்று வரலாம். அடுத்த நாள் காலை  குளித்து முடித்து முருகனை வணங்கி  விரதத்தை முடித்துக் கொள்ளலாம். 

ஆடிமாதம் தேவர்களுக்கு மாலை பொழுதாக  இருக்கும். இந்த மாதத்தில்  விளக்கு வைத்து  சாமி கும்பிட்டு வர வேண்டும். 

திருமணமாக வேண்டியோர்க்கு  திருமண வரம் மற்றும் வேண்டியதை முருகன் அருளால் பெறலாம். கிருத்திகை நாளானது முருகரை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மாதந்தோறும் வரும் கிருத்திகை  கடைப்பிடிக்க வில்லையென்றாலும் ஆனால் ஆடி மாதம், தை மாதங்களில் வரும் கிருத்திகையை கடைப் பிடிக்க வேண்டியது முக்கியமானது ஆகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *