ஆன்மிகம்

ஆடி வெள்ளியில் அம்பிககையின் அருள் பெற்ற மக்கள்!

இன்று கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி… அம்மனை வழிபட்ட மக்கள் அருள் பெற்றனர்…!! ஆடி வெள்ளி !! அள்ளிக் கொடுக்கும்.

 வெள்ளிக்கிழமைகளில் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை. அவளே   நம்பினாள் நம்மை தேடி வரச் செய்வாள்.  ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி” என்று சொல்கிறார்கள். ஆடி வெள்ளியன்று நாம் தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும்.

சிங்கத்தில் ஏறி பவனி வரும்

திருமகளை வழிபடுவதன் மூலம் செல்வநிலை உயரும். கிழமைகளில் சுக்ரவாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமைகளில்வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். தாயவள் நம்மை சேயாக எண்ணி காப்பாள்.  நம் சோகங்களையும் தீர்த்து வைத்து அருள்வதற்காகக் காத்திருக்கிறாள் அம்பிகை. எனவே, இன்றைய தினம் மறக்காமல் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள். 

பொதுவாகவே, எந்த மாதத்தின் வெள்ளிக்கிழமையாக இருந்தாலும் அம்மனுக்கு உகந்த நாள், அம்பிகைக்கு உகந்த நாள் என்று தரிசித்து மகிழ்வோம். அதிலும் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வருகிற வெள்ளிக்கிழமைகள் எல்லாமே மகத்துவம் வாய்ந்தவை.

 வெள்ளிக்கிழமையிலும் இன்னும் இன்னுமெனக் கனிந்துருகி, நமக்கெல்லாம் அருள்வதற்காகக் காத்துக்கொண்டிருப்பாள் தேவி என்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதனால்தான் ஆடி வெள்ளி இன்னும் சக்தி மிக்க நாளாகவும், சங்கடங்கள் அனைத்தையும் போக்குகிற தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி

வெள்ளிக்கிழமை ராகுகாலம் என்பது காலை 10.30 முதல் 12 மணி வரை. எனவே அந்த நேரத்தில், கோவிலுக்குச் சென்று அம்மனை வழிபடுவதும், அந்த ராகுகால வேளையில், கோவிலின் கோஷ்டத்தில் அல்லது தனிச்சந்நிதியில் இருக்கிற துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வணங்குவதால் எண்ணியது கிடைக்கும்.  வாழ்வில் ஏற்றம்  பெருகும்.

 ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமையிலும், அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல், கேசரி, கல்கண்டு சாதம், பால் பாயசம் என ஏதேனும் நைவேத்தியம் செய்து அம்பிகையை மனதார வேண்டினால் கேட்டது கிடைக்கும். வளம் பெருகும்.

குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம்,  சீப்பு, வளையல், பூ வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.

 உள்ளம் உறுகி வழிபட்டால் மூலம் வீட்டில் தரித்திரம் விலகும், சுபிட்சம் பெருகும். நிம்மதியும், ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும் என்பது உறுதியான பெரியோர்கள் வாக்காகும். சிறப்புடன்  வணங்குகள் இறை அருள் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *