ஆன்மிகம்ஆலோசனை

தைப்பொங்கல் சிறப்புகள்

கரும்பு இனிமையின் அடையாளமாக உழைப்பின் அருமையை உணர்த்துகிறது. கரும்பை வைத்தே வாழ்வின் தத்துவத்தை கூறுவார்கள். கரும்பு ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கரும்பின் நுனிப்பகுதி உப்பு சுவை உடையது. அடிப்பகுதி தித்திப்பாக இருக்கும். இதைத்தான் வாழ்வின் தொடக்கம் உப்பு போன்ற போராட்டத்தை கொடுத்தாலும், இறுதியில் கரும்பு போல இனிமையாக இருக்கும்.

கரும்பின் மேல் பரப்பு வளைவுகளையும், முடிச்சுகளையும் கொண்டிருந்தாலும் அதனுள் இனிப்பான சாறு இருக்கிறது. இதைத்தான் நம் வாழ்வில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அவற்றைக் கடந்து செல்லும் போது இனிமையான வாழ்க்கையை பெற முடியும். இதனால்தான் பொங்கல் பண்டிகையில் கரும்பை இறைவனுக்கு படைத்து வழிபடுகிறோம்.

வீட்டின் நிலைப்படியில்-உம் கரும்புகளை வைத்து அழகு படுத்துகிறார்கள். அதேபோன்று பொங்கல் பானைக்கு மஞ்சள் குலை வாங்கி கட்டுவது உண்டு. திருமகள் வாசம் செய்யும் மஞ்சள் மகாலட்சுமியின் அம்சமாக மங்கலப் பொருட்களில் முதன்மை இடம் கொண்டது. சுமங்கலிகள் மஞ்சள் தேய்த்துக் குளிக்க பயன்படுகிறது. புதிய ஆடையை வாங்கி உடுத்தும் போது மஞ்சள் வைத்து உடுத்த சொல்கிறார்கள்.

சுபநிகழ்ச்சிகள் என்றாலே மஞ்சள் முதலிடம் பெறும் அழைப்பிதழ்களுக்கு மஞ்சள் வைத்தல், அச்சத்தைக்கு மஞ்சள் சேர்ப்பது, பூஜை செய்யும் போதும் மஞ்சள் பிள்ளையார் பிடிப்பது. வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பது. இவை மஞ்சளின் அடையாளமாக மங்கலம் நிறைந்த பொருள் மஞ்சள்.

மேலும் படிக்க : வாழ்வை மாற்றும் சக்தி வாய்ந்த சிவ மந்திரம்

இத்தகைய மங்களத்தின் அடையாளத்தைக் கொண்ட மஞ்சள் கிழங்கு செடியோடு புதுப்பானைக்கு கட்டி பொங்கல் வைப்பார்கள். பொங்கல் அன்று பொங்கல் வைக்கும் போது ஊறவைத்த பச்சரிசியுடன், வெல்லம், ஏலக்காய் கலந்து காப்பரிசி வைப்பார்கள். இதற்கு காதரிசி என்ற மற்றொரு பெயர் உள்ளது.

மேலும் படிக்கவும் : தெய்வீகமான குருவாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *