சைவப் பிரியர்களின் ஸ்பெஷல் கலர்ஃபுல் பிரியாணி.!
வெஜிடபிள் பிரியாணி அனைத்து விதமான காய்கறிகளை இந்த பிரியாணியில் சேர்த்துக் கொள்வதால் இது ஒரு கலர்ஃபுல்லான சுவைமிக்க சத்துக்கள் நிறைந்த மசாலாக்கள் உடன் கூடிய காரசாரமான, சாப்பிட சாப்பிட இன்னும் சாப்பிடத் தூண்டும் வெஜிடபிள் பிரியாணி. இது சைவப் பிரியர்களின் ஸ்பெஷல் என்று சொல்லலாம்.
கலர்ஃபுல் பிரியாணி
தேவையான பொருட்கள் : கேரட், பட்டாணி, உருளைக் கிழங்கு, பீன்ஸ், காலிஃப்ளவர் தலா ஒரு கப். இஞ்சி, பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன். பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் அரை ஸ்பூன். பச்சை மிளகாய் தேவைக்கு ஏற்ப. பிரியாணி அரிசி அரைக் கிலோ. எண்ணெய் கால் லிட்டர். நெய் 50 கிராம். தக்காளி, வெங்காயம் தலா 50 கிராம்.
செய்முறை : முதலில் காய்களை கழுவி உங்களுக்கு தேவையான வடிவத்தில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு பேஸ்ட் இரண்டையும் தோல் உரித்து மையாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை தனியாக அரைத்து சாறு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
பட்டை, கிராம்பு, சீரகத்தை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் முழுமையாகவும், போட்டுக் கொள்ளலாம். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெயையும், நெய்யையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு ,சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், புதினா எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக சேர்த்து சிவக்க வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பிறகு ஒவ்வொரு காய்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் தேங்காய் பாலும், தண்ணீரும் கலந்து அரை கிலோ அரிசிக்கு, ஒரு கிலோ என்று தண்ணீர் விட்டு இதனுடன் அரிசியையும் களைந்து போட்டு முந்திரியை சேர்த்து குக்கரை மூடி ஒரு சத்தம் விசில் வந்ததும், 5 நிமிடம் கழித்து இறக்கவும். நெய் ஊற்றி கிளறவும். நாக்கில் சுவை ஊறும்.