Benifits of amla :நெல்லிக்காய் சாப்பிட்டால் இதெல்லாம் நடக்குமா???
நெல்லிக்கனியைப் பார்த்தால் அவ்வைக்கு அதியமான் கொடுத்தக்கனி என்பது தெரியும். நெல்லியில் வேற என்ன இருக்கு என்று நம்மில் சிலர் கேட்பதுண்டு.
சித்த வைத்தியத்தில் நெல்லிக்கனியைப் போல் ஒரு அருமருந்து கிடைக்காது. நெல்லிக்கனியை நாம் திரிபாலாவில் பார்க்கலாம். இதனை காயகற்பம் என்றும் சொல்வார்கள். தீராத வியாதியை நெல்லிக்கனி தீர்த்து வைக்கும். தாயுக்கு நிகரானது ஆகும்.
உயிர்காக்கும் நிவாரணி :
நெல்லிக்கனி தேனில் ஊரவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குணமாகி உடல் வலு பெறும்.
நெல்லிக்கனியில் கசப்பு, இனிப்பு, புளிப்பு ஆகியவை கலந்து இருக்கும். இது எளிமையில் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு நிவாரணி ஆகும்.
உடல் சூட்டை சமப்படுத்தும். வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமப்படுத்தி ஆரோக்கியம் அளிக்கும் ஆற்றல் நெல்லிக்கனிக்கு உண்டு.
தினமும் காலையில் எழுந்ததும் நெல்லிக்கனி ஒன்று சாப்பிட்டு வர விரைவில் ரத்தம் ஊறும். ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி நம் அழகில் முக்கியத்துவம் வாய்ந்தது நமது முடி. நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டு வர முடி உதிர்வு குறைந்து அருமையான அடர்த்தியான கூந்தல் வளரும்.
குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை தேனில் ஊற வைத்து அடிக்கடி கொடுத்து வர அவர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Image Source : Google