அழியாப் புகழுடன் எஸ்பிபி சார் பெற்ற விருதுகள்.. கடைசியாக பாடி வெளியான பாடல்…
எஸ்பிபி சார் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும், ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்று சாதனை படைத்தவர். பிலிம்பேர் விருதினை ஒரு முறையும், பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார்.

எஸ்பிபி சார் விருது
தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர். முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும், ‘சங்கராபரணம்’ என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.

ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினையும் பெற்றுள்ளார். 40 ஆயிரம் பாடல்களைப் பாடி உலக சாதனை புத்தகத்தில் கின்னஸ் இடம்பிடித்தார்.


எஸ்பிபி சார் பாடிய



எஸ்பி பி சார் கடைசியாக பாடிய
மேலும் இவர் கடைசியாக பாடிய பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிய விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன் படத்தில் இளையராஜா இசையில் பாடலை எழுதியவர் கவிஞர் பழனி பாரதி பாடல் வரிகள் ‘நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து தேயும் வான்பிறை தான்’ இந்த வரிகளை தீவிர சிகிச்சையில் இருந்த நாட்களில் கேட்பது மிகவும் உருக்கமாக இருக்கும்
மேலும் படிக்க ; ‘பாடும் நிலா’ எஸ்பிபி சாரின் நீங்கா நினைவலைகள்

எஸ்பி பி சார் வீட்டில் அடக்கம்
எஸ் பி பாலசுப்ரமணியம் சார் அவர்கள் 50 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவந்த எஸ்பிபி சார் நேற்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எஸ்பி பாலசுப்ரமணியம் அவரது உடல் இன்று காலை வரை சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளன. இன்று திருவள்ளுவர் மாவட்டம் தாமரை பக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளன. அழியாப் புகழுடன் எஸ்பிபி சார்.