சினிமாசெய்திகள்

எஸ்.பி.பி உடல்நிலை தேறி வருகின்றது !

டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகின்றது. நேற்று மருத்துவமனையில் டாக்டர்கள் அறிவித்தனர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தொற்று காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூச்சு விட சிரமம் காரணமாக அவருக்கு எக்மோ சாஸ்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பாடகர் பாலசுப்ரமணியம் உடல் பூரண குணமாக வேண்டுமென்று ரசிகர்கள் பார்த்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும் அவருக்காகத் தொடர்ந்து திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்துக்கள் கொடுத்து வருகின்றனர்.

திரையுலகில் எஸ்.பி.பி அவர்களின் பாடல்கள் அனைவரது உள்ளத்தையும் மலரச் செய்துள்ளது. இவருடைய ஆற்றல்மிக்க பாடல்கள் பலரது நிலைமைகளை எதிர்கொள்ள உதவியாக இருக்கின்றது. சபரிமலையில் எஸ்.பி சுப்ரமணியம் அவர்கள் உடல்நிலை ஆரோக்கியம் பெற உஷ பூஜை நடத்தப்பட்டு வந்தது. மேலும் அவருக்காக நாதஸ்வரம் அர்ச்சனையும் செய் துள்ளனர் உஷ பூசையை சிறப்பாகச் செய்து முடித்து.

சங்கராபரணம் பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்க அர்ச்சனை செய்துள்ளனர் இவருக்குப் பூஜை செய்தது சபரிமலை நடை நேற்று இரவு ஏழு முப்பது மணிக்கு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல்நிலை ரசிகர்கள் நடிகர்கள் நடிகைகள் என அனைத்து தரப்பு மக்களும் இவர் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். நாமும் திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் மீண்டும் வருவார் என்றும் நம்புவோம் பிரார்த்தனை செய்து கொள்வோம்.

திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் தமிழ் கதைகள் மிகச்சிறந்த பாடகராகப் போற்றப்படுகின்றார் அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன.1946 ஜூன் மாதம் 4 ஆம் தேதி கொண்டம்மாபேட்டை என்ற ஊரில் பிறந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். 16 இந்திய மொழிகளில் இவர் பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாலசுப்பிரமணியம் அவர்கள் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் 2011ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் அவருக்குப் பத்மபூஷன் விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இவர் போன்ற கலைஞர்கள்மீது மக்களின் அபிமானம் எப்பொழுதும் மக்கள் அபிமானிகளாக இருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *