செய்திகள்தமிழகம்

தென்னக ரயில்வே தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்குவதாக அறிவிப்பு

தமிழகத்தில் ஏற்கனவே 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. மேலும் 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் எட்டாம் தேதி முதல் சென்னை – கன்னியாகுமரி இடையே, செப்டம்பர் ஏழாம் தேதி முதல் சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலும், செப்டம்பர் ஏழாம் தேதி முதல் திருச்சி – நாகர்கோவில் மார்க்கத்திலும், தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளன. இதன்படி செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் சென்னை – எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரையிலும், வாரத்திற்கு 3 முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவித்தது.

தமிழகத்தில் ஏற்கனவே 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு கொடுத்துள்ளது. தென்னக ரயில்வே தமிழகத்தில் மேலும் 4 சிறப்பு ரயில்கள் இயக்குவதாக அறிவித்தது.

கொரோனா காலத்தில் தளர்வுகள் உடன் ரயில்கள் இயங்கினாலும், பயணம் செய்பவர்கள் அரசு அறிவித்த பாதுகாப்புகளை கடைபிடித்து பயணம் செய்வது அவசியமென்று கூறப்படுகிறது. மாஸ்க் அணிவது, தகுந்த சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயணம் செய்யுமாறு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *