தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை
தமிழகத்தில் பல இடங்களில் இன்று வெயில் குறைந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் வெயில் குறைந்து மழைப்பொழிவு இருக்கிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்து இருந்தாலும், இரவில் மழை பெய்து குளிர்ச்சியாக இருந்து வந்தது.
தமிழகத்தில் இன்று மதுரை விமான நிலையம், மதுரை, வேலூர், திருச்சி, கரூர் பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் ஆக வெயில் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் சென்னையில் உள்ளிட்ட பல்வேறு இடத்தில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் ஐ தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
ஆனால் கத்திரி வெயில் காலம் முடிவடைந்த பின்பும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வந்தது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறைந்து காணப்பட்டாலும் இதனை அடுத்து தமிழகத்தில் ஐந்து இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது.
இதனிடையே பல இடங்களில் மாலை நேரங்களில் மழை பெய்துள்ளது. மேலும் தமிழகத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.