கொரோனா தொற்றினால் மீண்டும் மக்களை எச்சரித்த தென்கொரிய அரசு
புதிய நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் சியோல் மற்றும் கியோங்கி நகர பகுதிகளிலேயே கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளனர். தென்கொரியாவில் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்கள் நோய் தொற்றுக்கான காரணங்களை கண்டறிய போராடி வருகின்றனர்.
நோய்க்கு தேவாலயங்கள் ஒரு முக்கிய காரணமாக உருவெடுத்துள்ளன. ஜனாதிபதி மூன் ஜெய் இன்க்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கிய வடக்கு சியோல் தேவாலய ஆயர் தலைமை இணை போராட்டத்தினை 300க்கும் மேற்பட்டோர் முன்னெடுத்தனர்.
அரசின் உத்தரவையும் மீறி சியோல் நகரத்தில் சனிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
இதனால் சுகாதார ஊழியர்கள் இதுவரை தேவாலயத்தின் இரண்டாயிரம் உறுப்பினர்களை பரிசோதித்து உள்ளனர். மேலும் 2000 பெயரை பரிசோதிக்க திட்டமிட்டுள்ளனர்.
தொடர்ந்து நோய் தொற்று அதிகரித்த காரணத்தால் நேற்று தென்கொரியாவில் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தென் கொரிய தலைநகர் அப்பகுதியில் கொரோனா தொற்று மிகவேகமாக அதிகரித்ததால் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் பார்க் நியூங் ஹீ மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறும் சியோல் மற்றும் அருகிலுள்ள கியோங்கி மாகாண மக்கள் இரண்டு வாரங்களுக்கு நாட்டின் பிற பகுதிகளுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
தென்கொரியாவில் நேற்று மட்டும் 279 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதத்திற்கு பிறகு இது மிகப்பெரிய பரவல் எண்ணிக்கை ஆகும் என அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளன.
தென்கொரியாவில் தொடர்ந்து நான்காவது நாளாக மூன்று இலக்க எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு அதிகரித்த காரணத்தால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறவும், பயணம் மேற்கொள்ளவும் அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.