ஹாப்பி பர்த்டே தாதா!
தமிழ்ல சொல்லப்படுற ரௌடி தாதா இல்லைங்க ஹிந்தி தாதா அண்ணன் பொருள் தரக்கூடிய வார்த்தை.
சவுரவ் கங்குலி
8 ஜூலை 1972ல் பிறந்த சவுரவ் கங்குலி இந்தியன் கிரிக்கெட் வீரர் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர். என்ன ஒரு வளர்ச்சி! வியக்கத்தக்க ஒன்று.
90ஸ் கிட்ஸ் ஓட நினைவு தெரிஞ்சு ஃபர்ஸ்ட் கிரிக்கெட் டீம் இந்த டீம் தான் இருக்கும். ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் இவங்க மூணு பேருக்கும் தனித்தனியா ரசிகர் மன்றங்களே இருக்குன்னு சொல்லலாம்.
ஹெல்தி காம்பெடிஷனு சொல்லுவாங்களே அதை இவங்ககிட்ட இருந்து கத்துக்கலாம். ஒருத்தருக்கு ஒருத்தர் சளச்சவங்க இல்ல, பொறாமையற்ற ஒரு போட்டி இருந்தது.
கிரிக்கெட் பயணம்
சவுரவ் கங்குலி இந்தியன் அணியோட இடதுகை பேட்ஸ்மேன் இறங்கி பின் அந்த அணிக்கு கேப்டனாக ஒரு நல்ல அணிய அமைத்துள்ளார். அவர் கேப்டனாக வருவதற்கு முன்பு ஐ.சி.சி தரவரிசையில் இந்திய அணி எட்டாவது இடத்தைப் பிடித்தது, மேலும் அவரது பதவிக் காலத்தில் அணி தரவரிசை இரண்டாவது இடத்திற்கு சென்றது. ஒரு ஆக்ரோஷமான கேப்டன் கங்குலி. தனக்கு கீழ் விளையாடிய பல இளம் வீரர்களின் வாழ்க்கையை வளர்த்துள்ளார்.
2008ல ஐபிஎல் டி20 வந்த புதுசுல கோல்கட்டா அணிக்கு கேப்டனாக விளையாடி அந்த வருடமே தன்னோட ரிட்டயர்மென்ட் அனோன்ஸ் பண்ணிட்டாரு. தற்போது பிசிசிஐ-யின் தலைவர்.
இவங்க ஆடுற விளையாட்ட பார்த்து அது மேல பெட் கட்டி பலபேர் சூதாட்ட ஆடுறாங்க. இவருக்கு ரொம்ப பிடிக்காத விஷயமாம். அதற்கு தகுந்தார்போல் தற்போது இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒரு பகுதியாக உள்ளார் , ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் மற்றும் பந்தய ஊழல் விசாரணைகளுக்கான நீதிபதி முட்கல் கமிட்டி விசாரணைக் குழுவில் நியமிக்கப்பட்டார்.
விருது
இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான கங்குலிக்கு 2004 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட் வாழ்க்கையில் பல விருதுகள் பெற்றிருந்தாலும் இந்த விருது குறிப்பிடத்தக்கது.
48 வயது பிறந்தநாளை கொண்டாடும் சவுரவ் கங்குலிக்கு மக்களுடைய வாழ்த்துக்கள்.